வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிரதீப் ரெட் காடுக்காக விழுந்த அடி.. மர்ம நபர்கள் வனிதாவின் கன்னத்தை பழுக்க வைத்த புகைப்படம்

vanitha assaulted :சர்ச்சைகளுக்கு அஞ்சாத சவுண்ட் பார்ட்டி வனிதா மர்ம நபரால் தாக்கப்பட்டு காயத்தோடு உள்ள தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி மூலம் அனைவராலும் அறியப்பட்ட வனிதா விஜயகுமார் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இதுபோக தனது மகள் ஜோவிகாவை பிக்பாஸ் சீசன் 7க்கு அனுப்பி வைத்துள்ளார். பிக்பாஸ் ரிவ்யூ என்ற பெயரில் சிசனில் தினமும் நடக்கும்  நிகழ்வுகளை குறித்து பேசி வருகிறார். “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல்” ஜோவிகாவின் ஆக்டிவிட்டிஸை முன்னிலைப்படுத்துவதோடு  மற்ற  உறுப்பினர்களின் கருத்துக்களை சாடுவதுமாக உள்ளார்.

Also Read:அதிரடியாக வெளியான பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.. கவர்ச்சி நடிகையை களம் இறக்க தயாராகும் விஜய் டிவி

சனிக்கிழமை இரவு ரிவ்யூ முடித்த கையோடு தன் சகோதரியின் வீட்டில் நிறுத்தி இருந்த அவரது காரை எடுக்க சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் வனிதாவின் முன் வந்து பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்கு நீ ஆதரவா? என்று கூறி அவரை தாக்கியதாக காயத்தோடு தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தன்னை தாக்கியது யார் என்று தெரியவில்லை கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று வேதனையோடு கூறியுள்ளார்.  காயம் காரணமாக திரையில் தோன்றும் படி இல்லாத காரணத்தினால் தற்போது அனைத்திலும் இருந்து சற்று பிரேக் எடுக்க விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

கருத்து சுதந்திரம் உள்ள நம் தேசத்தில் கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லையா என்று கருத்து கண்ணாயிரம் புலம்பி வருகிறார். மர்ம நபர், பிரதீப்பின் ஆதரவாளரா அல்லது வனிதாவின் கருத்தால் கொந்தளிக்கப்பட்டவரா என்று தெரியவில்லை. எது என்னவாக இருந்தாலும் தனியாக உள்ள பெண்ணிடம்  வன்முறையில் ஈடுபட்ட இந்த மர்ம நபரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மர்ம நபர்கள் வனிதாவின் கன்னத்தை பழுக்க வைத்த புகைப்படம்

bigg boss vanitha
bigg boss vanitha

Also Read:ஜோவிகாவை காப்பாற்ற தீயாக வேலை செய்யும் வத்திகுச்சி.. மட்டமான வேலைக்கு விளக்கு பிடிக்கும் பிக்பாஸ்

Trending News