நடிகை வரலட்சுமி சரத்குமார், சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளாக இருந்தாலும் சினிமாவுக்குள் எந்த பின்புலமும் இல்லாமல் வந்து ஜெயித்தவர் தான். இவர் சினிமாவுக்குள் வருவதற்கு நான் எந்த வகையிலும் ஆதரவு கொடுக்கவில்லை, மேலும் அவர் சினிமாவில் வருவதே எனக்கு பிடிக்கவில்லை என்று சரத்குமார் பொது மேடைகளில் ரொம்பவே வெளிப்படையாக இதை சொல்லி இருக்கிறார். மேலும் தற்போது தன் மகளின் வளர்ச்சியை பார்த்து அவர் மிகவும் பெருமிதமும் அடைந்து இருக்கிறார். வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் வரலட்சுமி.
போடா போடி: அறிமுக படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் வரலட்சுமி. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு கூட நிறைய பேருக்கு இவர் சரத்குமாரின் மகள் என்று தெரியாது. ரொம்பவும் துரு துருவென்று தன்னுடைய வித்தியாசமான நடிப்பினாலும், குரலினாலும் ரசிகர்களின் கவனத்தை இவர் ஈர்த்தார்.
Also Read: தமிழில் என்னை யூஸ் பண்ணிக்க ஆளில்லை.. கும்பிடு போட்டு கிளம்பிய வரலட்சுமி
தாரை தப்பட்டை: 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தாரை தப்பட்டை திரைப்படத்தின் சொர்ணவள்ளி கேரக்டரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. பாலா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வரலட்சுமி தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்து இருப்பார். மேலும் படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சிக்கு நிஜமான தெருக்கூத்து கலைஞரை போலவே இவர் ஆடியிருப்பார்.
நிபுணன்: வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நிபுணன். சஸ்பென்ஸ் நிறைந்த அதிரடி படமாக வந்த இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சிபி சிஐடி ஆபிஸர் வந்தனாவாக நடித்திருப்பார்.
Also Read: வரலட்சுமிக்கு சரியாக வழி காட்டவில்லை.. புலம்பிய சரத்குமார்!
விக்ரம் வேதா: புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படம் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவனுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. விக்ரம் வேதா திரைப்படத்தின் நடிகை வரலட்சுமி சந்திரா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்.
யசோதா: நடிகை சமந்தா தனி கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் யசோதா. வாடகை தாய் தொழில்நுட்பத்தில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இந்த படத்தில் சமந்தாவுக்கு நிகரான வில்லியாக அசத்தியிருப்பார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த படத்தில் இவர் நடித்த மதுபாலா கேரக்டர் வரலட்சுமிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது என்று சொல்லலாம்.
Also Read: என்ன பொண்ணுடா! 15 கிலோ உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய வரலட்சுமியின் புகைப்படங்கள்