சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூன் போன வரலட்சுமியின் புகைப்படம்.. என்ன நாட்டாமை இதெல்லாம்?

Varalakshmi Viral Photos: தமிழ் சினிமா நடிகைகள் எல்லாம் இப்போது பாலிவுட்டை தாண்டி, ஹாலிவுட் ரேஞ்சுக்கு தங்களுடைய சொந்த வாழ்க்கையில் இருக்கிறார்கள். இதில் ரொம்ப முக்கியமான குடும்பத்தை சேர்ந்த சில நடிகைகள் ஏதாவது செய்யும்பொழுது அது பெரிய அளவில் பேசும் பொருள் ஆகி விடுகிறது.

அப்படித்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. சரத்குமாரின் மகள் என்பதை தாண்டி தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறார் வரலட்சுமி.

இப்போதைக்கு அவருக்கு தெலுங்கு திரை உலகில் மவுசு அதிகம். போடா போடி படத்தில் நடிக்கும் பொழுதே இவர் சரத்குமாரின் மகள் என்றே பெரும்பாலான பேருக்கு தெரிந்திருக்காது. இதை ஒரு பேட்டியில் சரத்குமார் ஆரம்ப காலத்தில் தன்னுடைய மகளுக்கு சினிமாவில் தான் சப்போர்ட் செய்யவில்லை என்பதை பகிரங்கமாக கூட தெரிவித்து இருந்தார்.

மேலும் சரத்குமார் செய்த இரண்டாவது திருமணத்தால் தன்னுடைய முதல் மனைவியான சாயா தேவி, அவருக்கு பிறந்த வரலட்சுமி மற்றும் பூஜா மூவரும் சரத்குமார் உடன் அவ்வளவாக தொடர்பு இல்லாதது போல் தான் இருந்தார்கள்.

பின்னர் காலப்போக்கில் வரலட்சுமி சரத்குமாரிடம்பேச ஆரம்பித்து பின்னாளில் ராதிகா உடனும் நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டார். சரத்குமாரின் மகள்கள் வரலட்சுமி, பூஜா, மகன் ராகுல், ராதிகாவின் மகள் ரேயான் என இவர்களும் தங்களுக்குள் ஒரு நெருக்கமான வட்டத்தை தொடங்கி விட்டார்கள்.

சமூக வலைத்தளங்களில் இவர்கள் சந்தோஷமாக இருக்கும் நிறைய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தன்னுடைய குடும்பத்தாரை மட்டும் வைத்துக் கொண்டு வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.

கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூன்

நிக்கோலாய் சச்தேவ் என்னும் புகைப்பட கலைஞரை வரலட்சுமி திருமணம் செய்ய இருக்கிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு வரலட்சுமி, நிக்கோலாய் உடன் தாய்லாந்துக்கு டூர் சென்று இருக்கிறார்.

அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். ஒரு பக்கம் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இருந்தாலும் இதேபோன்று சந்தோஷத்துடன் திருமணத்திற்கு பிறகும் வரலட்சுமி இருக்க வேண்டும் என அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு பக்கம் நாட்டாமை, மனைவி ராதிகாவை எம்பி ஆக்கியே தீருவேன் என அரசியல் களத்தில் பிசியாக இருக்கிறார். மகள் கொளுத்தும் கோடை வெயில் சீசனை ஜாலியாக கொண்டாட வருங்கால கணவருடன் வெளிநாடு பறந்து இருக்கிறார். இந்த போட்டோக்களை பார்க்கும் பொழுது சில பேர் கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமாக, என்ன நாட்டாமை இதெல்லாம் உங்க வீட்ல இப்படி நடக்குது என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News