திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

பிக்பாஸில் இளசுகளை கதற விட்டுக் கொண்டிருக்கும் டம்மி மம்மி.. அடேங்கப்பா! ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே வயதான போட்டியாளர்கள் உள்ளே வந்தால் அவர்கள் முதல் இரண்டு வாரம் தாக்குப் பிடிப்பதே பெரிய விஷயம். முதலில் நடக்கும் இரண்டு எவிக்சன்களில் உபயோகப்படுத்திக் கொள்ளத்தான் இது போன்ற போட்டியாளர்களை பிக் பாஸில் வைத்திருப்பார்கள். ஆனால் அந்த இலக்கணத்தையே மொத்தமாக உடைத்திருக்கிறார் நடிகை விசித்ரா.

கவர்ச்சி மற்றும் காமெடி காட்சிகளில் தமிழ் சினிமாவில் கலக்கியவர். கன்னடம், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் தான் விசித்ரா. அதன்பின்னர் ஷாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து விசித்ரா சமீபத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீடியாவுக்கு கம் பேக் கொடுத்தார்.

அந்த நிகழ்ச்சியில் இறுதிவரை வந்த விசித்ரா டைட்டிலை வின் பண்ண வில்லை என்றாலும் மக்கள் மனதில் ரிஜிஸ்டர் ஆனார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவர் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் என்ற பார்ப்போம் என பார்வையாளர்கள் நினைத்தார்கள். ஆனால் விசித்ரா இப்போது பிக் பாஸ் வீட்டில் முக்கியமான போட்டியாளராக இருக்கிறார்.

Also Read:கப்பு முக்கியம் பிகிலு.. பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு நாசுக்காக ஹிண்ட் கொடுத்த உடன்பிறப்பு

பிக் பாஸ் முந்தைய சீசன்களை கரைத்துக் குடித்துவிட்டு உள்ளே வந்திருக்கும் இளம் போட்டியாளர்களுக்கு பெரிய அளவில் போட்டியாக இருப்பது விசித்ரா தான். மற்ற அனைத்து போட்டியாளர்களும் விசித்ரா மூலம் தான் கண்டன்ட் எடுக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு கூட சில வாரங்கள் அமைந்தன. அர்ச்சனாவிடம் சண்டை, அர்ச்சனா உடன் சேர்ந்து கொண்டு வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை என வத்திக்குச்சியாய் வீட்டை பற்ற வைத்தார்.

விசித்ராவின் ஒருநாள் சம்பளம்

10 பேர் இருக்கும் கூட்டத்தில் கூட தைரியமாக ஒருவரை எதிர்த்து பேச முடியும் என்றால் அது விசித்திராவுக்கு தான் சாத்தியம். மாயா மற்றும் பூர்ணிமா இவரிடம் வாய் கொடுக்கவே கொஞ்சம் யோசிப்பார்கள். இதுவரை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த வயதான போட்டியாளர்களுக்கு எல்லாம் இவர் ஒரு பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறார். தற்போது விசித்ராவின் ஒருநாள் சம்பள விவரம் வெளியாகி பெரிய வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். உள்ளே இருக்கும் போட்டியாளர்களிலேயே அதிக சம்பளத்தை வாங்குவது இவர்தான். உள்ளே 80 நாட்களை கடந்து இருக்கும் விசித்ரா கண்டிப்பாக இறுதிப் போட்டியிலும் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. போட்டியில் ஜெயிக்காமல் கிட்டத்தட்ட 95 நாட்களை கடந்துவிட்டாலே விசித்ரா 40 லட்சம் சம்பளமாக வாங்கி விடுவார்.

Also Read:அடிச்சும் திருந்தாத புள்ளைய ஆப்பு வச்சு திருத்திட்டீங்க.. ஹவுஸ் மேட்ஸை ஓரங்கட்டி ஸ்கோர் செய்த நிக்சனின் ரத்த உறவு

Trending News