அரசியலிலும் சினிமாவிலும் தடம்பதித்து, தன்னுடைய படங்களில் பல சமூக கருத்துக்களை சொல்லும் கதாபாத்திரங்களை நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் கேப்டன் விஜயகாந்த் என பெருமையுடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த்.
இவருடைய கல்யாண மண்டபத்தில் தடபுடலான உணவுகளை சமைத்து மக்களுக்கு வழங்கி அதில் மகிழ்ந்தவர். பலரது பசியை ஆற்றிய கேப்டன் விஜயகாந்த் பொதுவாகவே நல்ல மனசு உடையவர். இவருக்கும் முன்பு எம்ஜிஆரும் இதே போன்று தான் செய்வாராம்.
Also Read: வடிவேலு விஷயத்தில் பெரிய மனுசனாக நடந்து கொண்ட விஜயகாந்த்.. கோர்த்து விடாமல் காப்பாற்றிய கேப்டன்
இந்த காலத்தில் ஹீரோக்கள் பெரும்பாலும் முக்கால்வாசி சம்பளத்தை, படம் துவங்குவதற்கு முன்பே வாங்கிவிட்டு தான் ஷூட்டிங்கிற்கே வருவார்கள். ஆனால் விஜயகாந்த் பெருந்தன்மையுடன் படத்தின் தயாரிப்பாளர்கள் எவ்வளவு அட்வான்ஸ் கொடுக்க முடியுமோ அதை வாங்கிக் கொள்வார்.
அப்படி இவரது நடிப்பில் 1985 ஆம் ஆண்டு சிவி ராஜேந்திரன் இயக்கத்தில், சித்ரா லக்ஷ்மணன் தயாரிப்பில் வெளியான ‘புதிய தீர்ப்பு’ படத்திற்காக அவருக்கு 2.5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டது. இதற்காக 50 ஆயிரம் மட்டுமே முன்பணமாக வாங்கி படத்தை நடித்து கொடுத்தாராம்.
Also Read: ஆணவத்தால் அழிந்த விஜயகாந்த்.. இப்ப இருக்கிற நிலைமைக்கு அவர்தான் காரணம்
படம் வெற்றி பெறாது என்ற எண்ணம் படத்தின் தயாரிப்பாளருக்கு எழுந்தபோது, இதைக்குறித்து விஜயகாந்திடம் பேசியுள்ளனர். அதற்காக விஜயகாந்த் பெருந்தன்மையுடன் ஐம்பதாயிரத்தை கழித்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தில் விஜயகாந்த்திற்க்கு ஜோடியாக அம்பிகா நடித்திருப்பார். பெரும்பாலும் விஜயகாந்த் படத்தில் நளினி தான் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அம்பிகா இந்த படத்தில் விஜயகாந்த்திற்க்கு ஜோடியாக நான்தான் நடிப்பேன் என உரிமையோடு வந்து ஒப்பந்தமானாராம்.
Also Read: உங்களுக்கு ஒன்னுனா நா வருவேன்.. நன்றி மறவாத விஜயகாந்த்