சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மகளை வைத்து காசு பார்க்க திட்டம் போட்ட அம்மா.. காதலனோடு ஓட்டம் பிடித்து அல்வா கொடுத்த நடிகை

சின்னத்திரை சீரியல்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அந்த நடிகைக்கு ஓரளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதை வைத்து கல்லா கட்ட ப்ளான் போட்ட நடிகையின் அம்மா அவரை வற்புறுத்தி நடிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

ஏனென்றால் நடிகைக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வம் கிடையாது. படித்து முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் இருந்திருக்கிறார். ஆனால் அவருடைய அம்மாவோ சீரியல்களில் நடித்து படிப்படியாக சினிமாவிலும் மகளை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதனால் வேற வழி இல்லாமல் சீரியல்களில் நடித்து வந்த அந்த நடிகை இப்போது தன்னுடைய காதலனுடன் ஓட்டம் பிடித்து விட்டாராம். ஆரம்பத்தில் அந்த நபரை சைட் அடித்து வந்த நடிகை பிறகு அவர் நல்ல வேலையில் செட்டில் ஆனதும் காதலுக்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

Also read: ஆசை காட்டி முடிந்த அளவுக்கு பயன்படுத்திக்கொண்ட இயக்குனர்.. புலம்பும்  இளம் நடிகை 

அம்மாவுக்கு தெரியாமல் இந்த காதலை சைலண்டாக வளர்த்து வந்த நடிகை இப்போது நேரம் பார்த்து எஸ்கேப் ஆகி விட்டாராம். இதற்கு முக்கிய காரணம் நிறைய சம்பாதிக்கணும் என அம்மா செய்த டார்ச்சர் தான் என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

மேலும் காதலரின் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதனாலேயே இப்படி ஒரு முடிவுக்கு நடிகை வந்திருக்கிறார். தற்போது இரு வீட்டிலும் பெரும் சண்டை வெடித்திருக்கிறது. இதற்கு நடுவில் நடிகை இனிமேல் நடிப்பாரா என்ற கேள்விகளும் முளைத்துள்ளது.

Also read: காசு தான் முக்கியம்னு டார்ச்சர் செய்த அம்மா.. காதலனுடன் சீரியல் நடிகை செய்த லீலை

Trending News