சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

இதுவரை அந்த நடிகையுடன் ஒருபடம் கூட நடிக்காத விஜயகாந்த்.. சமீபத்தில் வெளியான காரணம்

கேப்டன் விஜயகாந்த் 80, 90களில் நடித்த பெரும்பாலான நடிகைகளுடன் நடித்துள்ளார். ஆரம்பத்தில் விஜயகாந்த் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்தார். எனக்கு இது மட்டும் தான் வரும் என நினைத்து இருந்த விஜயகாந்தை மாடன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது ராதிகா.

விஜயகாந்த், ராதிகா இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதனால் ராதிகா கூட சிறிது காலம் விஜயகாந்த் கிசுகிசுக்கப்பட்டார். மேலும் விஜயகாந்தை ஒரு மாடன் ஹீரோவாக்கிய பெருமை ராதிகாவை சேரும். மேலும் விஜயகாந்த் கருப்பாக உள்ளார் என அவருடன் நடிக்க சில நடிகைகள் மறுத்தனர்.

அதன் பிறகு விஜயகாந்த் மார்க்கெட் உயர்ந்தபோது அந்த நடிகைகள் விஜயகாந்துடன் நடித்து ஆசைப்பட்டனர். மேலும், பல நடிகைகளும் விஜயகாந்த் உடன் நடிக்க போட்டி போட்ட நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒரு நடிகை இவருடன் நடிக்கவே இல்லை.

அது ஸ்ரீதேவி தான். அப்போதைய காலகட்டத்தில் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படம் என்றாலே அதில் ஹீரோயினாக ஸ்ரீதேவிதான் நடித்திருப்பார். இவர்களுடன் இணைந்து ஸ்ரீதேவி பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தாலும் விஜயகாந்துடன் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை.

அப்போது விஜயகாந்த் பிஸியாக இருந்த காலகட்டத்தில் ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு ஸ்ரீதேவி பல படங்களில் கமிட்டாகி மிக பிஸியாக இருந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

அதனால் விஜயகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதேவிக்கு கடைசிவரை கிடைக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் ஜோடியாக நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Trending News