Mollywood Me Too: எதார்த்தமான கதை களங்களால் இந்திய சினிமா தொடங்கி உலக சினிமா வரை கொண்டாடப்படுகிறது மலையாள சினிமா உலகம். சமீபத்தில் மலையாள சினிமாவில் ரிலீசான ஒரு சில படங்கள் அந்த இண்டஸ்ட்ரியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி கொண்டு வந்தன.
இப்படியாகப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஹேமா கமிட்டி என்ற ஒரு விசாரணை குழு கொடுத்திருக்கும் அறிக்கை ஒட்டுமொத்த சினிமா உலகையும் அதிர செய்திருக்கிறது. போதாத குறைக்கு இன்று நடிகை ராதிகா சரத்குமார் சொன்ன விஷயம் தூக்கி வாரிப் போடும் அளவுக்கு இருக்கிறது.
மலையாள சினிமா உலகில் நடந்து கொண்டிருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை பற்றி தான் இந்த வாரம் முழுக்க பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் இதை பற்றி மீடியாக்கள் கேள்வி எழுப்பி வருகிறது.
பகீர் கிளப்பிய ராதிகா சரத்குமார்
அட்ஜஸ்ட்மென்ட் டீல் என்பதை தாண்டி அறிக்கை வெளியானதும் மோகன்லால் உட்பட முக்கியமான சினிமா பிரபலங்கள் நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்தது தான் இந்த பிரச்சனையை இன்னும் பெரிதாக்கியது. மலையாளம் என்பதை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் வரை பார்த்து ரசித்த ஒரு சில நடிகர்களின் பெயர்கள் இந்த விசாரணையில் சிக்கி இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை ராதிகா தான் ஒரு மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படப்பிடிப்பில் சில ஆண்கள் ஒரு வீடியோவை பார்த்து சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். நான் அந்த இடத்தை கடந்து வந்து விட்டேன்.
அதன் பின்னர் இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என விசாரித்தேன். அப்போது நடிகைகள் உடை மாற்றும் கேரவனுக்குள் ரகசியமாக கேமரா வைத்திருக்கிறார்கள். அந்த வீடியோவை தான் தற்போது பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன்.
அடுத்த நாளிலிருந்து ஹோட்டலில் ரூம் எடுத்து அங்கிருந்தே நான் உடையை மாற்றிக் கொண்டு வந்தேன். இது குறித்து என்னுடைய சக நடிகைகளுக்கும் எச்சரிக்கை கொடுத்தேன் என பேசி இருக்கிறார். ராதிகா சொன்ன இந்த விஷயம் பெரிய புரளியை கிளப்பி இருக்கிறது.
அத்தோடு மட்டுமல்லாமல் அப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்டதும் ஏன் ராதிகா புகார் கொடுக்க முன் வரவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தற்போது ராதிகாவிடம் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் சிலர் பரிந்துரைத்து வருகிறார்கள்.
மலையாள சினிமாவில் நடக்கும் இந்த விஷயம் எல்லா ரசிகர்களுக்குமே பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை பாவனா மலையாள சினிமா உலகின் முக்கிய ஹீரோவாக இருந்த திலீப் முகத்திரையை கிழித்தெறிந்தார். தற்போது பல வருடங்களுக்குப் பிறகு முக்கியமான நடிகர்கள் பலரும் சிக்கிருக்கிறார்கள்.
மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை
- ரியாஸ்கான் மீது மலையாள நடிகை கொடுத்த புகார்
- முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கும் விஷால்
- கோபத்தில் கொந்தளித்த பிக்பாஸ் நடிகை