திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஹிட்டு கொடுத்தவுடன் சம்பளத்தை உயர்த்தி 5 நடிகைகள்.. அதுவும் சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா

சினிமாவில் மார்க்கெட்டை பிடித்ததும் தங்களுடைய சம்பளத்தை உயர்த்துவதை நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது டாப் 5 தென்னிந்திய நடிகைகள் தங்களது வெற்றிக்குப் பிறகு தங்களது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி அந்த நடிகைகளை தற்போது பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதில் முதல் இடத்தை நடிகை சமந்தா பிடித்திருக்கிறார். தொடக்கத்தில் 1 கோடி சம்பளத்தை வாங்கிக் கொண்டிருந்த சமந்தா, தன்னுடைய ஃபேமிலி மேன்2 படத்தின் வெற்றிக்குப் பிறகு, தன்னுடைய சம்பளத்தை 25 கோடியாக சமந்தா மாற்றிவிட்டு, அடுத்தடுத்த படங்களில் அந்த சம்பளத்தையே உடன் அதற்கு மேலும் தற்போது கேட்கத் தொடங்கி உள்ளார்.நயன்தாரா சினிமா மார்க்கெட் காரணமாக முதல் இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது இவரை ஓரங்கட்டிவிட்டு சமந்தா முதல் இடத்திற்கு வந்துள்ளார்.

2-வது இடம் ராஷ்மிகா மந்தனா பிடித்திருக்கிறார். இவர் மேல் இந்திய அளவிலான ரசிகர்கள் கிரஷ் ஆக உள்ளனர். ஆரம்பத்தில் தன்னுடைய படத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா தன்னுடைய அடுத்தடுத்த பட வெற்றிக்குப் பிறகு 3 கோடி சம்பளமாக ஒரு படத்திற்கு கேட்கத் துவங்கி விட்டார்.

அடுத்ததாக 3-வது இடத்தை பூஜா ஹெக்டே பிடித்திருக்கிறார். பாலிவுட்டில் தனது நடிப்பை துவங்கிய பூஜா ஹெக்டே அங்கு அவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், தற்போது தென்னிந்திய சினிமாவில் நடிக்க திட்டமிட்டு தன்னுடைய முதல் தமிழ் படத்தை அதிர்ஷ்டவசமாக தளபதி விஜயுடன் சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தியுள்ளார். அத்துடன் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ஒரு சில வெற்றிப் படங்களை கொடுத்து சுமார் 2 கோடி சம்பளம் வரை வாங்கிக் கொண்டிருக்கிறார்.

நான்காவதாக கீர்த்தி சுரேஷ் வாரிசு நடிகையாக திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதன் பலனாக  தன்னுடைய ஆரம்பகட்ட படங்களுக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், தேசிய விருதை பெற்றுத் தந்த மகாநதி படத்திற்கு பிறகு ஒரு படத்திற்கு 2 கோடி சம்பளத்தை அசால்டாக வாங்கி கொண்டிருக்கிறார்.

ஐந்தாவதாக இவர்களைப் போலவே தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியாமணி, ஒரு சில வெற்றிகளை ருசித்த பின்பு தன்னுடைய பாதையையே மாற்றி மார்க்கெட்டை நிலை நிறுத்தி இருக்கிறார். ஏனென்றால் பிரியமணி பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் படமான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடனமாடி, ஓடிடி பக்கம் அதிக கவனம் செலுத்தி தற்போது ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் வெப் சீரிஸ்களில் நடித்ததன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 4 முதல் 5 லட்சம் சம்பளத்தை பிரியாமணி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

Trending News