சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கடத்தல் விவகாரத்தில் சிக்கும் நடிகைகள்.. தயாரிப்பாளரால் அம்பலமாகும் குட்டு

அக்கட தேசத்தில் கடத்தல் விவகாரம் அதிகம் கேள்விப்பட்டு வந்த நிலையில் இப்போது கோலிவுட்டிலும் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில் அவரது நெருங்கிய வட்டாரத்தை சுற்றி வளைத்துள்ளனர் போலீசார்.

அதாவது அவர்களுக்கும் இந்த கடத்தல் விவாகரத்தில் தொடர்பு இருக்கிறதா என்று ஆராய தொடங்கி இருக்கின்றனர். இதில் பிரபல இயக்குனரும் சிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பல நடிகைகளின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

அதாவது இந்த கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை சினிமாவில் போட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள். இதே போல் சில நடிகைகளும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளருக்கு பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள்.

இதனால் அவர்களுக்கும் குறிப்பிட்ட தொகை சென்று கொண்டிருக்கிறது. இப்போது தயாரிப்பாளர் சிக்கிய நிலையில் நடிகைகள் நாமும் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் இருக்கிறார்களாம்.

தயாரிப்பாளர் உண்மை எல்லாம் கக்கி விட்டால் கடத்தல் ஈடுபட்ட நடிகைகளின் கதி அவ்வளவுதான். இப்போதே தயாரிப்பாளர் உடன் இருந்த தொடர்பை மறைக்க பல நடிகைகள் வேலை செய்து வருகிறார்கள்.

என்னதான் மறைத்தாலும் தயாரிப்பாளர் வாயிலிருந்து உண்மை வந்தால் நடிகைகள் மாட்டுவது உறுதி. ஆகையால் ஒருவேளை இந்த வழக்கில் சிக்கினால் அடுத்ததாக என்ன செய்யலாம் என்ற ஏற்பாடுகளை சத்தமே இல்லாமல் தயாரிப்பாளருடன் கடத்தலில் ஈடுபட்ட நடிகைகள் முன்னெச்சரிக்கையாக செய்து கொண்டிருக்கின்றனர்.

Trending News