செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

திருமணத்திற்கு பின் நடிப்பை உதறி தள்ளிய 6 நடிகைகள்.. உங்க சவகாசம் வேண்டாம் என கமுக்கமாக இருக்கும் ஷாலினி

பொதுவாகவே நடிகைகளின் மிகப்பெரிய ஆசையே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வேண்டும் என்பது மட்டுமே. அந்த வகையில் சில நடிகைகள் நடித்து மிகவும் பிரபலமடைந்த நிலையில் சினிமாவை உதறித் தள்ளிவிட்டு திருமண வாழ்க்கைக்கு சென்ற ஆறு நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

அசின்: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இவரை நெருங்க முடியாத அளவிற்கு முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்தார். இவர் தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உச்ச நடிகர்களான விஜய், அஜித், சூர்யா உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக கோலிவுட் சினிமாவில் வலம் வந்தவர். அதிலும் இவர் நடித்த படங்களில் போக்கிரி, கஜினி போன்ற படங்களில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் கடைசியாக நடித்த காவலன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் போய்விட்டார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு கணவன் மற்றும் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்.

Also Read: வாயினால் அழிந்து நாசமான 5 நட்சத்திரங்கள்.. பாலிவுட் தான் முக்கியம் என எல்லாத்தையும் இழந்த அசின்

ஜெனிலியா: ஜெனிலியா என்றதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது அவருடைய குறும்புத்தனமான நடிப்பும், துள்ளலான பேச்சும். இவரின் அனைத்து படங்களிலும் குறும்புத்தனமான நடிப்பை மட்டுமே காட்டி ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு ஒரு சீரியசான முகம் செட்டே ஆகாது என்று பெயர் வாங்கியவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். பின்பு பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

நஸ்ரியா நசீம்: தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை மனதை கொள்ளை அடித்தவர் நஸ்ரியா. இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக ஆனது. அதிலும் தமிழில் ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சினிமா வாழ்க்கை வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார். பின்பு நடிகர் ஃபஹத் பாசில்லுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

சாய்ஷா: இவர் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் சில படங்களில் நடித்தாலும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கியவர். பின்பு இவர் முன்னணி நடிகரான ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சினிமா வாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகி விட்டார்.

Also Read: நஸ்ரியாவிற்கு கிடைத்த விடுதலை.. அன்பால் கட்டிப் போட்ட பிரபல நடிகர்

எமி ஜாக்சன்: தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின்பு இவர் நடித்த தெறி, ஐ மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தில் நடித்து உலகளவில் பெயர் பெற்றார். ஆனால் அதன் பிறகு இவருக்கு எந்த படமும் கிடைக்கவில்லை. இதனால் இவர் சினிமாவை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டார்.

ஷாலினி: 90s காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய கனவு கன்னியாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் நடித்த காதலுக்கு மரியாதை, அமர்க்களம் போன்ற படங்களில் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். உச்சக்கட்ட நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் நடிகர் அஜித் குமார் உடன் காதல் வசப்பட்டு திருமண வாழ்க்கைக்கு சென்று விட்டார். ஆனாலும் இவர் இப்பொழுது வரை எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. இவர் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ஒன்றிப் போய்விட்டார்.

Also Read: இணையத்தில் ட்ரெண்டான அஜித் ஷாலினி ரொமான்டிக் புகைப்படம்.. துணிவு பிரமோஷன் யுக்தியா?

Trending News