Gossip : குடியும், குடித்தனமாக இருந்த நடிகர் இப்போது வீட்டுப் பக்கமே வரவில்லை என்று அவரது மனைவி குற்றச்சாட்டை வைக்கிறார். கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் அன்னியோன்யமாக இருந்து வந்துள்ளனர்.
ஆனால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு சீரியலை நடிகர் கமிட்டாகி இருக்கிறார். அந்த தொடரில் அவரது கதாபாத்திரமே குடித்துவிட்டு, போதைக்கு அடிமையாகுவது போன்று தான். அப்படி நடித்த அவருக்கு நிஜத்திலும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டதாம்.
அவ்வாறு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். அதையும் பொறுத்துக் கொண்ட நிலையில் சில மாதங்களாகவே வீட்டு பக்கம் வராமல் நடிகர் இருந்துள்ளார். சிறிது காலம் அவரது மனைவி பொறுத்து விட்டு இப்போது பொங்கி எழுந்து விட்டார்.
சூட்டிங் ஸ்பாட்டில் கதறிய நடிகையின் மனைவி
அதாவது சூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று தனது கணவனை வெளியே வர சொல்லி உள்ளார். ஆனால் சீரியல் தரப்பிலிருந்து அவரெல்லாம் வர சொல்ல முடியாது உங்க பிரச்சனையை நீங்க வீட்ல பார்த்துக்கோங்க என்று கூறியிருக்கின்றனர்.
அவர் வீட்டு பக்கம் வராததற்கு காரணமே இந்த சீரியலாக தான். நல்லா இருந்த மனுஷனா இந்த சீரியல் நாசமாகிடுச்சு, எங்களுக்கு இந்த சீரியலும் வேணாம் ஒன்னும் வேண்டாம் என்று நடிகரின் மனைவி கதறி இருக்கிறார்.
கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் அவரை அந்த இடத்தில் இருந்து துரத்தி விட்டிருக்கின்றனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தும் இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.