புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இதுவரை இல்லாத அஜித்தை காட்டப் போகும் குட் பேட் அக்லி.. AK ஆதிக்கை முழுசா நம்பிய பின்னணி!

Adhik is going to portray Ajith differently in Good Bad Ugly movie: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் பெயரை டேமேஜ் செய்வது போல் வலைதள விஷமிகள் சிலர், அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர். 

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதில்லை, ஒரே மாதிரியாக நடிக்கிறார், காஸ்டியூம் கூட சேஞ்ச் பண்றது கிடையாது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர். 

இதனைக் கண்ட ரசிகர்களும் சற்று எதிர்மறையாக திரும்பவே! “நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது” என்பது போல் இருந்த அஜித் தற்போது அதிரடி காட்டி களத்தில் இறங்க உள்ளார். 

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் இணையும் ஆதிக்

துணிவின் வெற்றிக்குப் பின் மலைபோல் நம்பி இருந்த மகிழ்திருமேனியின் விடாமுயற்சியை சற்று ஓரம் கட்டி விட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் உடன் குட் பேட் அக்லியில் கைகோர்த்து உள்ளார் அஜித்

இந்த முறை சற்று வித்தியாசமாக, தோற்றத்திலும் சரி, திரைக்கதையிலும்  சரி ட்ரெண்டிங்கில் இருக்கிற மாதிரி லுக்குடன், தனித்துவமாக உள்ள கதை தான் வேண்டுமென்று ஆதிக்கிடம் கட்டளை இட்டுள்ளார். 

ஆதிக், மார்க் ஆண்டனி வெற்றி படத்தைப் போன்று தரமான டைம் டிராவல் கதையை கூறவே மகிழ்ச்சி அடைந்த அஜித் உடனே ஓகே சொல்லி தயாரிப்பாளரையும் பிக்ஸ் பண்ணி விட்டார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தில் மூன்று காலகட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தலைப்பிற்கு தகுந்த மாதிரி மூன்று விதமான தோற்றத்தில் தோன்ற உள்ளாராம் அஜித்.  

1999 ல்  வெளிவந்த அஜித்தின் வாலி

சற்று பின்னோக்கி பார்த்தால் தொடர் தோல்விகளால் துவண்டு கொண்டிருந்த அஜித்திற்கு எஸ் ஜே சூர்யாவின் வாலி  தரமான வெற்றியை பதிவு செய்து அஜித்தின் கேரியரில் திருப்புமுனையாக இருந்தது. 

வாலி திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் ஏற்க தயங்கும் நெகட்டிவ் கேரக்டரை துணிச்சலாக ஏற்று தனது திறமையின் மூலம் பலரையும் பேச வைத்தார்.  

இன்று அதே போன்றதொரு வெற்றியின் மூலம் தன்னை   விமர்சிப்பவர்களுக்கு, தனது தீவிர ரசிகன் ஆதிக்கின் குட் பேட் அக்லி மூலம் தரமான பதிலடி கொடுத்து தனது ரசிகர்களை குஷி படுத்த உள்ளார் அஜித்.

Trending News