
Goos Bad Ugly: அஜித்தின் குட் பேட் அக்லி ஏப்ரல் 10ம் தேதியை குறி வைத்துள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் இப்போது ஜோராக நடந்து வருகிறது.
டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் என ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் ஸ்பெஷல் போட்டோக்களும் வைரலாகி வருகிறது. அதே போல் ட்ரைலர் எதிர்பார்க்காத அளவு இருக்கும் என தெரிகிறது.
இதற்காக ஆதிக் மெனக்கெட்டு ஒவ்வொரு வேலையையும் பார்த்து வருகிறார். இதற்கிடையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படம் தொடர்பான பல ரகசியங்களை கூறியுள்ளார்.
அதில் படத்தின் டைட்டில் அஜித் தேர்வு செய்தது தான் என்ற ரகசியத்தை உடைத்துள்ளார். அதேபோல் படத்தில் ஆக்சன் மட்டும் இல்லாமல் எமோஷனல் காட்சிகளும் இருக்கிறதாம்.
அந்தப் பட வாடை வருதே
இதில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் வருகிறார் என்பதை போஸ்டர் மூலமே சொல்லி இருந்தனர். அதில் அப்பா மகன் என அந்த கேரக்டர்கள் உருவாகி இருக்கிறது.
அது பற்றி கூறியுள்ள ஆதிக் ஆக்சன் மட்டும் ஒர்க் அவுட் ஆகாது. சென்டிமென்ட் வேண்டும். அதுதான் ரசிகர்களிடம் ஈசியாக கனெக்ட் ஆகும் என கூறி இருக்கிறார்.
ஆக மொத்தம் அனைவரும் எதிர்பார்த்தது போல் இதில் அப்பா மகன் சென்டிமென்ட் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே அசல் படத்தில் இதை பார்த்திருக்கிறோம். அந்தப் பட வாடை இருக்குமோ என ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.