செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

குணசேகரனால் கதிகலங்கி போய் நிற்கும் ஆதிரை.. எதிர்பார்க்காத ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் விதமாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத ஆதிரை கல்யாணத்தை குணசேகரன் நினைத்தபடி கரிகாலன் உடன் நடத்தி முடித்து விட்டார்.

ஆனாலும் ஆதிரை எனக்குப் பிடிக்காத இந்த தாலி தேவையில்லை என்று தூக்கி எறிந்து விடுகிறார். இதனால் குணசேகரன் இப்போதைய காலத்தில் கட்டின தாலிய வேணா தூக்கி எறிந்து விடலாம், முறைப்படி ரிஜிஸ்டர் பண்ணி விட்டால் அதை யாராலயும் ஒன்று பண்ண முடியாது என்று அவருடைய  மூளைக்கு எட்டியதால் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண முடிவெடுத்து விட்டார்.

Also read: தாலி சென்டிமென்ட் வைத்து உருட்டும் விஜய் டிவி.. புரட்சி செய்யும் எதிர்நீச்சல்

இதற்கு இடையில் ஆதிரை தன்னுடைய வாழ்க்கைக்காக தன்னந்தனியாக இருந்து அண்ணன்களிடம் போராடிக் கொண்டிருக்கிறார். எதற்கும் அஞ்சாத குணசேகரன் ஆதிரை கண்ணீரை பார்த்து என்ன மனசு மாறிடவா போறாரு. எப்படியோ ஞானத்தின் மூலமாக ஈஸ்வரி இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார்.

ஆதிரை கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணுவதற்காக எல்லோரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் போயிருக்கிறார்கள் என்று. உடனே ஜனனி ரிஜிஸ்டர் மட்டும் பண்ணிட்டால் எதுவுமே பண்ண முடியாது என்று ஆவேசமாக கிளம்புகிறார். ஆனால் இவருடைய ஆவேசம்தான் எப்படி இருக்கும் என்று ஆதிரை கல்யாணம் நடக்கும் போதே தெரிந்தது.  ஜனனிக்கு வெறும் வாய்சவடால் மட்டும்தான். மற்றபடி காரியத்துல ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லை.

Also read: துணிச்சலாக தூக்கி எறிந்த கரிகாலனின் தாலி.. குணசேகரனை விட சொர்ணா அக்காவாக மாறிய ஆதிரை

அருண் வரவில்லை என்றாலும் இந்த கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் அதை பண்ணாமல் வேடிக்கை பார்த்தவர் தானே ஜனனி. இப்ப மட்டும் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு போய் என்னத்த கிழிக்க போறாங்க. பாவம் இதற்கு ஆதிரையே தனியா விட்டிருந்தா கூட அவளுடைய வாழ்க்கைக்கு போராடி அருண் கூட சேர்ந்து இருப்பார்.

தற்போது ரிஜிஸ்டர் ஆபீஸில் கையெழுத்து போட மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த ஆதிரையை குணசேகரன் மிரட்டி கையெழுத்து போட வைக்கிறார். இருந்தாலும் கடைசியில் அண்ணன் ஞானம் மூலம் ஏதாவது விடிவு காலம் பிறக்காதா என்று ஆதிரை ஞானத்திடம் கொஞ்சம் பேசணும் என்று கேட்கிறார். இதில் ஏதாவது ஒரு திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அது எப்படி, யாரால என்று பொறுத்திருந்து பார்க்கலாம்

Also read: குணசேகரன் உருவானது எப்படி.? எதிர்நீச்சல் ஷாக்கிங் சீக்ரெட்டை உடைத்த திருச்செல்வம்

Trending News