வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அஜித்துக்கு ஜோடியாகும் 2 பாலிவுட் ஹீரோயின்.. நெகட்டிவ் ரோல் யாருக்கு

அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து மீண்டும் வலிமை பட கூட்டணி அடுத்த படத்தில் இணைகிறார்கள். இந்த படத்தின் பூஜை நாளை ஆரம்பமாக இருக்கிறது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. அஜித்தின் கடந்த சில படங்களில் பாலிவுட் நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடித்து வந்தனர். அதனால் இந்த திரைப்படத்திலும் பாலிவுட் ஹீரோயின் தான் நடிப்பார் என்ற ஒரு பேச்சு இருந்தது.

மேலும் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்த நடிகை தபு மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைகிறார் என்ற ஒரு தகவலும் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது அஜித்துக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் நடிக்க இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது.

சமீபகாலமாக அஜித்தின் படங்களை போனிகபூர் தயாரிப்பதால் இந்தி நடிகைகளை தான் அவர் ஹீரோயினாக நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் இந்த திரைப்படத்திலும் அதிதி ராவ் உட்பட மற்றொரு பாலிவுட் ஹீரோயினும் இருக்கிறார்.

ஆனால் இன்னும் அந்த பாலிவுட் நடிகை யார் என்று முடிவாகவில்லை அநேகமாக நடிகை தபு அந்த கேரக்டரில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட சில முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைய இருக்கின்றனர்.

மேலும் இந்தப்படத்தில் அஜித் மங்காத்தா திரைப்படத்தில் வந்தது போல ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்க இருப்பதாக வினோத் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டு பாலிவுட் ஹீரோயின்களும் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News