வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

600 கோடியும் அம்பேலா.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஆதிபுருஷ் 2-வது நாள் வசூல் விவரம்

Adipurush: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் நேற்று முன்தினம் உலகெங்கும் வெளியானது. ராமாயணத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸுடன் சயிப் அலிக்கான், கிருத்தி சனோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளே கலவையான விமர்சனத்தை பெற்றதால் இரண்டாம் நாளில் ஏதாவது வசூலில் மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என பட குழு அஞ்சினர். அதேபோன்று முதல் இரண்டு நாளில் ஆதிபுருஷ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பார்த்த பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

Also Read: ராமர் மார்க்கெட்டையே காலி செய்த பிரபாஸ்.. ஒட்டுமொத்தமாக கதறவிட்ட ஆதிபுருஷ்

600 கோடி பட்ஜெட்டில் 3டி எஃபெக்ட்டுடன் மோஷன் கேப்சர் டெக்னாலஜி என பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ஆதிபுருஷ் ரசிகர்களின் மத்தியில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. இதன் மேக்கிங் சீரியல் அளவுக்கு கூட ஒர்த்து இல்லை என பங்கம் செய்கின்றனர்.

அது மட்டுமல்ல இதில் இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் அப்படியே ஹாலிவுட் படத்தில் இருந்து அட்டகாப்பி அடித்திருப்பதாகவும் ஓம் ராவத்தை கிழித்து தொங்க விடுகின்றனர். எனவே ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்திருக்கும் ஆதிபுருஷ், 4000 ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளில் ஒட்டுமொத்தமாக 80 கோடியை வசூலித்தது.

Also Read: பாகுபலிக்கு பின் தொடர்ந்து 3 படுதோல்வி படங்கள்.. பிரபாஸை மலை போல் நம்பி இருக்கும் அடுத்த நான்கு படங்கள்

முதல் நாளை தொடர்ந்து இரண்டாவது நாளில் ஆதிபுருஷ் படத்திற்கு பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, இந்தியாவில் 40 கோடியும் தெலுங்கில் 45 கோடியும் வசூல் செய்துள்ளது. மற்ற மொழிகளில் சுத்தமாகவே வசூல் கிடைக்காமல் போனது. ஆகையால் ஆதிபுருஷ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் இரண்டாவது நாளில் மொத்தமாக 85 கோடியை வசூலித்து இருக்கிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, படத்திற்கு போஸ்டர் ஒட்டுன காசாவது மிஞ்சுமா! என தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டு மூலையில் முடங்கி விட்டனர். மொத்தமாக 600 கோடியும் அம்பேல் தான் என ஆதிபுருஷ் படத்தின் வசூல் விவரத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

Also Read: Adipurush Movie Story Review- இதைத்தான் இத்தனை நாளா உருட்டிகிட்டு இருந்தீங்களா.? ஆதி புருஷ்ஷா இல்ல பீதி புருஷ்ஷா.. முழு விமர்சனம்

Trending News