வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இப்படி எல்லாம் விளம்பரப்படுத்தினா படம் ஓடுமா.? தியேட்டரில் சீட்டு ஒதுக்கிய ஆதிபுருஷ் பிரபாஸ்

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சைப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் ரௌட் இயக்கியுள்ள இப்படத்தின் கடைசி ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் எப்படியாவது வசூல் சாதனை படைத்து விட வேண்டும் என்று பட குழு முட்டி மோதி பல விஷயங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல ரசிகர்கள் மத்தியில் கேலியும், கிண்டல்களையும் தான் பெற்று வருகிறது.

Also read: அதர்மத்தை கூண்டோடு வேரறுக்க வரும் ஆதிபுருஷ் கடைசி ட்ரெய்லர்.. பயத்துடன் வெளியிட்ட பிரபாஸ்

அந்த வகையில் தற்போது பட குழு வித்தியாசமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது ஆதிபுருஷ் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் எல்லாம் ஒரே ஒரு சீட் மட்டும் தனியாக ஒதுக்கப்பட்டு விடுமாம். அதாவது ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை காலியாக விடப்படும் என்று பட குழு அறிவித்துள்ளது. இதுதான் இப்போது சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த அறிவிப்பு நெட்டிசன்களையும் குஷிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே படத்தை கண்டபடி கலாய்த்து வரும் அவர்கள் இப்போது மீம்ஸ் எல்லம் போட்டு கிண்டலடிக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் ஆஞ்சநேயரை ஒரு சீட்டில் நாங்கள் ஒதுக்கி வைக்க விரும்பவில்லை, மொத்த தியேட்டருமே அவருக்குத்தான் என்று படகுழுவை பங்கம் செய்து வருகின்றனர்.

Also read: ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ் ட்ரெய்லர்

ஏற்கனவே 500 கோடி பட்ஜெட்டை இயக்குனர் வீணாக்கி விட்டார் என்றும் அத்தனையும் குப்பை தொட்டிக்கு தான் போகப் போகிறது என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதில் இப்படி ஒரு அறிவிப்பை பார்த்தவர்கள் தியேட்டர் முழுவதும் காலியாக தான் இருக்கப் போகிறது. இதில் எதற்கு ஒரு சீட்டை மட்டும் ஒதுக்கி வைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் சிலர் இப்படியெல்லாம் பிரமோஷன் செய்தால் மட்டும் படம் ஓடிவிடுமா, இதைப் பார்த்தால் குபீர் சிரிப்பு தான் வருகிறது என இந்த அறிவிப்பை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இப்படி ஆதிபுருஷ் டீம் என்ன முயற்சி செய்தாலும் அது சோசியல் மீடியாவில் பங்கம் செய்யப்பட்டு வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் குறைத்துள்ளது. இதைப் பார்த்த பாகுபலி நாயகன் தான் பாவம் தல தப்புமா என்ற பீதியில் இருக்கிறாராம்.

Also read: போஸ்டருடன் வெளியானது ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி.. பிரபாஸ் பிறந்தநாளுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்

Trending News