திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

கமலை தாக்கி விஜய் சேதுபதிக்கு கொடுத்த அட்வைஸ்.. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு, வேற ரகம் பார்த்து உசாரு தலைவரே

Bigg Boss Vijay Sethupathi: கடந்த 7வருஷமாக விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து கொடுத்தது ரியாலிட்டி ஷோவாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதே மாதிரி இந்த வருஷமும் பிக் பாஸ் நிகழ்ச்சி கலைகட்ட ஆரம்பம் ஆகிவிட்டது. அதிலும் கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகிறார் என்று தெரிந்ததிலிருந்து மக்கள் எப்பொழுது பிக் பாஸ் ஆரம்பமாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் மக்கள் செல்வனாக இருக்கும் விஜய் சேதுபதி நிச்சயமாக மக்களின் தீர்ப்புக்கு செவி சாய்பார், மக்களின் குரலாகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களை மட்டுமே ரசிக்கும் விஜய் சேதுபதி தொடர்ந்து நல்ல தீர்ப்புகளை கொடுப்பார். ஒருதலைப் பட்சமாக கடந்த சீசனை நடத்தி வந்த கமலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது விஜய் டிவியில் ப்ரோமோ வெளியாயிருக்கிறது.

மக்களின் குரலாக தீர்ப்பு வழங்க வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

அந்த வகையில் தற்போது வெளிவந்த ப்ரோமோவில் பிரதீப்புக்கு தவறான கார்டு கொடுத்ததை சுட்டிக்காட்டும் விதமாக ஒரு சிறுவன், தப்பாக விளையாடுபவருக்கு யாருக்கு எந்த கார்டு கொடுக்க வேண்டும் என்று தெரியும்ல என்று கமலை தாக்கி விஜய் சேதுபதிக்கு நச்சு என்ற அட்வைஸ் வழங்கியிருக்கிறார். அத்துடன் மக்கள் எதைப் பார்க்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்களோ, அந்த விஷயங்கள் அனைத்தையும் ப்ரோமோ மூலமாக சொல்லி பார்ப்பவர்களை உற்சாகப்படுத்தி விட்டது.

அதே மாதிரி ஒவ்வொரு நாளும் அடாவடித்தனமாக இருந்துட்டு வாரத்தின் கடைசியில் ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாறி இருப்பார்கள் என்று அசிமை தாக்கி விஜய் சேதுபதிக்கு ஒரு குழு கொடுத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இனி வரப்போகிற ஒவ்வொரு எபிசோடும் தரமான சம்பவமாக இருக்கும் என்பதற்கு ஏற்ற மாதிரி விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தெறிக்க விடப் போகிறார்.

அது மட்டுமில்லாமல் இவர் இப்பொழுது புதுசாக வந்திருப்பதால் இன்னும் இதை சூடேற்றும் விதமாக சீசன் 1 மற்றும் 3 நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கு போல வித்தியாசமாகவும் கடினமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தேடித்தேடி புத்தம் புது யுக்திகளை கைவசம் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பாரபட்சமே இல்லாமல் பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களை வைத்து களைகட்ட போகிறது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு, இனி நிகழ்ச்சியோ வேற ரகமாக இருக்கப் போகிறது பார்த்து உஷாராக இருக்கணும் தலைவரே.

விரைவில் ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 8

Trending News