புதன்கிழமை, ஜனவரி 8, 2025

5 வருடங்களுக்குப் பிறகு டாப் ஸ்டாரின் ஹீரோ அவதாரம்.. பிரசாந்தின் அந்தகன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Andhagan Trailer: ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்த பிரசாந்த் கடந்த சில வருடங்களாகவே எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயின் கோட் படத்தில் அவர் நடிப்பது ரசிகர்களுக்கு பேரானந்தமாக இருக்கிறது.

அந்த ராசி தானோ என்னவோ ஐந்து வருடங்களாக இழுத்தடித்து வந்த அவருடைய அந்தகன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் வெளிவந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அதன்படி பிரசாந்த் இப்படத்தில் பார்வையற்ற பியானோ வாசிக்கும் ஒருவராக நடித்துள்ளார். ஆனால் டிரைலரை பார்க்கும்போது அவர் கண் தெரியாதவராக நடித்து கொலை செய்யும் மர்ம நபர் ஆகத்தான் தெரிகிறார்.

க்ரைம் திரில்லராக உருவான அந்தகன்

அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் சிம்ரன், கார்த்திக், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, வனிதா என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். அத்துடன் ட்ரெய்லரும் கிரைம் திரில்லர் பாணியில் இருக்கிறது.

இதில் பிரசாந்த் போடும் இரட்டை வேஷம் சிம்ரனின் கதாபாத்திரம் அனைத்தும் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் நிச்சயம் டாப் ஸ்டாருக்கு ஒரு கம்பேக்காக இருக்கும் எனவும் தெரிகிறது.

மேலும் பல தடங்கல்களுக்கு பிறகு வெளிவரும் அந்தகன் ஆகஸ்ட் மாதத்தை குறி வைத்துள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் டாப் ஸ்டாரின் ஹீரோ அவதாரத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரிலீசுக்கு தயாரான பிரசாந்தின் அந்தகன்

Trending News