வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

6 மாதம் கழிச்சு நெப்போலியன் மகன் தனுஷூக்கு மீண்டும் கல்யாணம்.. ஏன் தெரியுமா?

கோலிவுட்டின் தற்போதைய ஹாட் பிக் என்னவென்றால் நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ்- அக்‌ஷயாவின் திருமண நிகழ்ச்சிதான். இவர்களின் திருமணம் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி பிரமாண்டமாக ஜப்பானில் நடந்தது.

இந்த திருமணத்திற்கு, கோலிவுட் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டிலிருந்து ஜப்பான் தலை நகர் டோக்கியோவுக்குச் சென்றனர். அங்கு எல்லோரையும் நேரில் வந்து அழைத்த நெப்போலியன், எல்லோருக்கும் தனித்தனி சொகுசு அறையில் தங்க வைத்தார்.

ரூ.150 கோடியில் பிரமாண்டமாக தனுஷ்(26), அக்‌ஷயா(21) திருமணம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில், இன்னும் 6 மாதம் கழித்து இவர்களின் திருமணம் மீண்டும் அமெரிக்காவில் நடக்கும் என நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

6 மாதம் கழிச்சு மீண்டும் கல்யாணம்

நெப்போலியன் – ஜெயசுதா தம்பதியர்க்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் தனுஷ், இளைய மகன் குணால். தனுஷுக்கு சிறுவயதில் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது. இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற நெப்போலியன் தன் திறாமையால் ஐடி கம்பெனி பல ஆயிரம்பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, விவசாயமும் பெரியளவில் செய்து, தொழிலதிபராக அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

தனுஷுக்கு பெண் தேடி வந்த நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த அக்‌ஷயாவின் குடும்பத்தாரிடம் பேசி, பெண்ணின் விருப்பத்தின் பேரில், பேச்சுவார்த்தை நடத்தி சமீபத்தில் வீடியோ மூலம் நிச்சயம் நடத்தி, கோலாகலமாக திருமணம் ஜப்பானில் நடந்தது. இந்த நிலையில், 6 மாதம் புதுமணத் தம்பதியர் இருவரும் அங்கேயே தங்குவார்களாம்.

ஜப்பானின் திருமண சட்டதிட்டங்கள் எதுவும் அமெரிக்காவில் செல்லாது என்பதால் அமெரிக்கா சட்டமுறைப்படி இன்னும் 6 மாதங்கள் கழித்து அந்த நாட்டில் தனுஷ் -அக்சயா திருமணம் நடக்கும் என நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஒரேசெலவாக அமெரிக்காவிலேயே திருமணம் செய்திருக்கலாமே என்ற பலரும் கேள்வி எழுப்பினால், தன் ஆசை மகனின் விருப்பம், ஜப்பானில் கல்யாணம் செய்ய வேண்டும் எனபதால் ஒரு அப்பாவாக அதை நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Trending News