சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டியதால் கிடைத்த பலன்.. 8 வருடம் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கும் விஜய் பட ஹீரோயின்

முன்பெல்லாம் சினிமாவில் இலைமறை காயாக காட்டப்பட்டு வந்த கவர்ச்சி இப்போது பலரையும் கண் கூச வைக்கும் அளவுக்கு இருக்கிறது. அதிலும் கவர்ச்சி நடிகைகள் எல்லாம் ஓரமா போங்க என்னும் அளவுக்கு முன்னணி ஹீரோயின்களே பட வாய்ப்புகளுக்காக கண்ணை உறுத்தும் வகையில் கிளாமர் காட்டுவது அதிர்ச்சியை கொடுக்கிறது.

அந்த வகையில் விஜய் பட ஹீரோயின் ஒருவர் கவர்ச்சி காட்டியே தற்போது ஒரு பட வாய்ப்பை வாங்கியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு துரு துரு ஹீரோயினாக அனைவரையும் கவர்ந்தவர் தான் மீரா ஜாஸ்மின். தன்னுடைய எதார்த்தமான மற்றும் குடும்ப பாங்கான நடிப்புக்காகவே இவர் பல விருதுகளை தட்டிச் சென்றிருக்கிறார்.

Also read: லியோ மொத்தப் படக் குழுவும் பேக்கப்.. ஒன் மேன் ஆர்மியாக மாஸ் காட்டும் விஜய்

அதன் பிறகு புதுப்புது நடிகைகளின் வரவால் இவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சில வருட இடைவெளிகளில் மீண்டும் திரும்பி வந்த இவர் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். அதிலும் அரைகுறை ஆடையில் இவர் வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெகு பிரபலமாக தொடங்கியது.

அதன் பலனாக அவருக்கு பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து வர ஆரம்பித்தது. அந்த வகையில் தற்போது மீரா ஜாஸ்மின் எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். கடைசியாக இவர் 2014 ஆம் ஆண்டு விஞ்ஞானி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மலையாள படங்களில் நடித்து வந்த இவர் இப்போது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also read: சினிமாவுக்கு போடும் அஸ்திவாரம்.. டாப் ஹீரோவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சினின் வைரல் புகைப்படம்

அந்த வகையில் விமானம் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று மீரா ஜாஸ்மின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. ஆனால் இந்த படம் மூலம் அவருடைய முயற்சி எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது கொஞ்சம் சந்தேகம் தான். ஏனென்றால் இவருடைய மார்க்கெட் எப்பவோ சரிந்து போய்விட்டது.

இப்போது பல இளம் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகின்றனர். அதனாலேயே 40 வயதை கடந்த நடிகைகள் இப்போது அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களுக்கு தள்ளப்பட்டு விட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீரா ஜாஸ்மின் மீண்டும் களம் இறங்கி இருப்பது அவருக்கு கை மேல் பலனை கொடுக்குமா என்பது படம் வெளி வந்தால் தெரிந்து விடும்.

Also read: 18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.? கூலாக பதில் சொன்ன அனிகா

Trending News