செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா.. 2 வருடங்களுக்குப் பிறகு கொடுக்கும் அசத்தல் என்ட்ரி

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகை அனுஷ்கா கடந்த சில வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். இவர் கடைசியாக நடிகர் மாதவனுடன் இணைந்து நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு அவர் எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவருடைய அதிகபட்ச உடல் எடை தான். இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை அளவுக்கு அதிகமாக ஏற்றினார்.

யோகா டீச்சராக இருக்கும் இவர் எப்படியாவது தன்னுடைய உடல் எடையை குறைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் அந்த படத்தில் நடித்தார். ஆனால் அவருடைய போதாத காலம் அவர் எதிர்பார்த்தபடி அவரின் உடல் எடையை குறைக்க முடியவில்லை.

இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்ற யோசனையில் இருந்த அவருக்கு திருமணமும் கைகூடவில்லை. ஆதலால் அவர் சில காலம் நடிப்புக்கு பிரேக் எடுத்து உடல் எடையை குறைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.

அதன் பலனாக தற்போது கணிசமாக உடல் எடையை குறைத்திருக்கும் அனுஷ்கா 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் தெலுங்கு நடிகர் நவீன் போலீ செட்டியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட இருக்கிறது.

அதை தொடர்ந்து இவர் நடிகர் பிரபாசுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே பில்லா, மிர்ச்சி, பாகுபலி போன்ற படங்களில் இவர்கள் இருவரும் நடித்திருக்கின்றனர். அதிலும் பாகுபலி திரைப்படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

இதனால் இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று கூறி வந்த நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கிறது. அந்த வகையில ரசிகர்கள் மீண்டும் இந்த க்யூட்டான ஜோடியை திரையில் பார்க்க இருக்கின்றனர்.

Trending News