செல்லத்தம்பிக்காக விஜய் செய்த காரியம்.. மேனேஜரால் வெளிவந்த ரகசியம்

விஜய்யின் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் வெளிவந்துள்ளது. இதையடுத்து அவர் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் முடித்த கையோடு விஜய் தற்போது மும்பை சென்றுள்ளார்.

அங்கு அவர் தன் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள் அனைத்தையும் அவரின் மேனேஜர் வெளியிட்டுள்ளார். மேலும் இது சாதாரண சுற்றுலாவா அல்லது இதற்கு பின்னணியில் ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்து வருகிறது.

அதை விசாரித்து பார்த்ததில் அதற்கு பின்னணியில் இருக்கும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது விஜய்யின் செல்ல தம்பியான அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து தற்போது ஒரு இந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் மும்பை சென்றதற்கான பின்னணியில் உள்ள காரணம் இதுதான் என்று சொல்லப்படுகிறது. விஜய் அட்லியின் இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் அட்லி அவருக்கு ரொம்பவும் பிடித்த இயக்குனர் மட்டுமல்லாமல் தம்பி ஸ்தானத்திலும் இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் விஜய், அட்லி இயக்கும் இந்தி திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க போகிறார் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதனால்தான் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படம் முடித்த உடனே மும்பைக்கு பறந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும் விஜய் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் உண்மையாகத்தான் இருக்கும். ஏனென்றால் அட்லி மற்றும் ஷாருக்கான் இருவரும் கூப்பிடும்போது விஜய் நிச்சயம் மறுப்பு சொல்ல மாட்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →