ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக் பாஸில் வந்த பிறகு சீரியல் வாய்ப்பும் பறிபோனதா? உண்மையை உடைத்த ரட்சிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக மாறியவர்தான் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. இவர் அதன் பிறகு தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், இளவரசி, கீமாஞ்சலி போன்ற சீரியல்களில் அடுத்தடுத்து நடித்தார்.

அதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் ஏற்கனவே உப்பு கருவாடு என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்பு கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட வாய்ப்புகளை பெற முயன்றார். ஆனால் அதுவும் கை கொடுக்கவில்லை. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு கிடைத்த சீரியல் வாய்ப்பும் வராமல் போனது. இதனால் பெரும் விரத்தியில் இருந்த ரட்சிதா, சமீபத்தில் அமீர்- பாவனி கூட்டணியில் உருவாகும் படத்தின் பிரஸ் மீட்டிங் போது பல உண்மைகளை உடைத்துச் சொல்லி இருக்கிறார்.

Also Read: விஷ்ணு- சம்யுக்தா சண்டையை ஆரம்பித்ததை இவர்தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் செய்த மட்டமான வேலை

அதாவது அமீர் இயக்கி நடிக்கும் படத்தில் பாவனி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், காயத்ரி ஜெயராம், சுரேஷ் சக்கரவர்த்தி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கப்பட்டது. அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் பாவனியுடன் கலந்து கொண்ட பிற போட்டியாளர்களும் வருகை தந்தனர். அந்த வரிசையில் ரட்சிதாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் ரட்சிதாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு சீரியல் வாய்ப்பு கூட கிடைக்காமல் போகிறதா? என கேள்வி கேட்டு இருக்கின்றனர். அதற்கு ரட்சிதா நக்கலாக சிரித்தது மட்டுமின்றி, நாங்களும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கண்ணில் தெரிந்தால் நன்றாக இருக்கும். அமீர் எப்படி பாவனியை வைத்து இயக்குகிறாரோ, அதேபோல திறமையான நடிகைகளை வைத்து படம் பண்ண இயக்குனர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க கூடாது.

Also Read: தத்துப் பிள்ளைக்கு கிடைத்த பெஸ்ட் ஆங்கர் விருது.. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய் டிவி

பிக் பாஸில் கற்றுக் கொள்வதை வாழ்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை கேரியருக்காக பயன்படுத்தக் கூடாது. பிக் பாஸை பார்த்து எனக்கு பட வாய்ப்பு கிடைப்பதை விட, பல சீரியல்களில் நான் நடித்திருக்கிறேன் அதை வைத்து எனக்கு படம் கிடைத்தால் போதும். பிக் பாஸ்க்கு சென்று வந்த உடனேயே எல்லாம் நடந்து விடும் என்பது பொய். அது ஒரு கேம் ஷோ, அதை முடித்துவிட்டு அடுத்ததாக நம்முடைய வேலையை பார்த்து விட வேண்டியது தான் என்று ரட்சிதா பேசும் தோரணையை வைத்து பார்க்கும் போதே அவர் எந்த அளவுக்கு விரத்தி அடைந்து இருக்கிறார் என்பது தெரிகிறது.

இப்போது ரட்சிதாவிற்கு சீரியலில் நடிக்க கூட வாய்ப்பு கிடைக்காமல் கடை திறப்பு விழா, பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு விழாவிற்கும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதைத்தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை. இந்த பேட்டிக்கு பிறகாவது ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. டாப் 10 இடத்திற்கு மல்லுக்கட்டிய பிரபல சேனல்கள்

Trending News