வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆதாரம் கிடைத்தும் கோபியை தப்பிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் பாக்யா.. பதிலடி கொடுக்க ஆனந்த் மூலம் போட்ட பிளான்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ஹோட்டலில் இருந்து செய்த பலகாரங்கள் அனைத்தும் டெலிவரிக்கு தயாராகிவிட்டது. அந்த நேரத்தில் ஆனந்துக்கு கோபி போன் பண்ணுகிறார். கோபி தான் போன் பண்ணுகிறார் என்று பாக்யா தெரிந்த நிலையில் ஆனந்த் ஃபோனை வாங்கி ஸ்பீக்கரில் போடுகிறார்.

அப்பொழுது கோபி, பிரியாணியில் கெட்டுப்போன கறியை போட்ட மாதிரி இந்த இனிப்பு பலகாரத்தில் எதையாவது பண்ணி பாக்கியாவின் ஹோட்டலை நிரந்தரமாக மூடுவதற்கு பிளான் பண்ணிருங்க என்று சொல்கிறார். இதை கேட்டு அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சியானதோடு ஈஸ்வரியும் தன்னுடைய ராசி மூலம் பாக்கியாக்கு பிரச்சனை வரவில்லை கோபி பண்ண சதிதான் என்று புரிந்து விட்டது.

மேலும் ஆனந்த பற்றி தெரிந்து கொண்ட செல்வி, கோபத்தில் ஆனந்தை அடிக்கிறார். அப்பொழுது பாக்யா தடுத்து இவர் தான் கெட்டுப்போன கறியை போட்டார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஹோட்டல் பிரச்சனை வந்த போது இவரை சந்தித்து பேசுவதற்காக வீட்டிற்கு போனேன். அப்பொழுது ஆனந்த் உடைய மகள் உடம்பு சரியில்லாமல் இருந்தார்.

அந்த நேரத்தில் ஆனந்தின் மனைவி எல்லா உண்மையும் சொல்லிவிட்டார். அத்துடன் ஆனந்துக்கும் அவர் பண்ணியது தவறு என்பது புரிந்து விட்டது. ஆனாலும் கோபியிடம் எதுவுமே நடக்காத படி காட்டிக் கொண்டதற்கு காரணம் அவர் இந்த ஆர்டர் மூலம் பெருசாக பிளான் போட்டு வைத்திருந்தார்.

ஆனால் கடைசிவரை அவர் நம்பிக்கையை சம்பாதிக்கும் அளவிற்கு ஆனந்த் சரி என்று சொல்லி கடைசி நிமிடத்தில் அவர் ஏமாந்து போக வேண்டும் என்பதற்காகத்தான் நான் ஆனந்த் மூலமாக காய் நகர்த்தினேன் என பாக்கியா கூறுகிறார். அதாவது பாக்யா சொல்வது தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் இருக்கிறது.

எல்லா பிரச்சனைக்கும் காரணம் கோபி தான் என்கிற விஷயம் தெரிந்துவிட்டது. ஆதாரமும் கையில் கிடைத்திருக்கிறது, அதை வைத்து கோபி செய்த தவறுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் விதமாக பாக்யா அதிரடியான முடிவை எடுத்திருந்தால் உண்மையாகவே பாராட்டக்கூடியதாக இருக்கும்.

ஆனால் அதை விட்டுவிட்டு தற்போது கோபியிடம் போய் சவால் விடும் விதமாக பேசுவது, நீ என்ன பண்ணினாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்பதற்கு ஏற்ப கோபியை தப்பிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் அளவிற்கு தான் பாக்கியாவின் நடவடிக்கைகள் இருக்கிறது. அதனால் தான் கோபியும் அவர் இஷ்டப்படி ஹோட்டலிலும் வீட்டிலிலும் புகுந்து நாரதர் வேலையை பார்த்து வருகிறார்.

அது தெரிந்தும் பாக்கியா வாயை மூடி கொண்டிருப்பது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. அத்துடன் கோபி எப்படிப்பட்டவர் என்பதையும் புரிந்து கொள்ளாமல் பிள்ளைகளும் அப்பா தான் பெருசு என்பதற்கு ஏற்ப பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படியே போனால் பாக்கியா கடைசியில் ஜெயித்தாலும் அதில் பெருசாக கொண்டாடும் அளவிற்கு சொந்த பந்தங்கள் பக்கத்தில் இருக்க மாட்டாங்க போல. அதிரடி ஆக்சன் தப்புக்கு உடனே தண்டனை என்கிற விதமாக பாக்யா கொஞ்சம் ஆவேசத்துடன் கோபிக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Trending News