புதன்கிழமை, ஜனவரி 15, 2025

17 வருடத்திற்கு பிறகு இரட்டை வேட வில்லன்.. தமிழ் சினிமா கையில் எடுக்கும் புது அவதாரம்

கடந்த 2005 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக வெளிவந்த  கஜினி படத்தில் மட்டுமே வில்லன் இரட்டை வேடங்களில் நடித்தார்கள். அதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருக்கும் நடிகர் பிரதீப் ராவத் தனது அசத்தலான நடிப்பை இரண்டு வேடங்களில் வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்திருப்பார்.

இதுமட்டுமின்றி பிரதீப் ராவத், தொட்டி ஜெயா படத்தில் சீனா தானா என்னும் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார். எனவே கஜினி படத்தில் சூர்யா மற்றும் பிரதீப் ராவத் இருவரும் இரட்டை வேடத்தில் கதாநாயகன்களாகவும் வில்லன்களாகவும் நடித்து அசத்தினார்களோ அதேபோன்று இப்போது தமிழ் சினிமாவில் அந்த படத்திற்கு பின், மற்றுமொரு படத்திற்கு ஹீரோ மற்றும் வில்லன் இருவரும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறை. எஸ் ஜே சூர்யா வில்லனாக இருவேடங்களில் நடித்து இருக்கிறார். பொதுவாக எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு தனித்துவம் வாய்ந்தது என்பதால் அவர் இரு வேடத்தில் நடிப்பது கச்சிதமாக பொருந்தும்.

அத்துடன் இந்தப் படத்தில் ஹீரோவாக விஷாலும் இரு வேடங்களில் நடிக்கிறாராம். விஷ்ணு இந்த படத்தில் முதன்முதலாக இரு வேடத்தில் நடிக்கப் போகிறார். அதனால் படத்தின் கதையை யோசிக்க முடியாத அளவிற்கு பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பை கிளப்பி வருகின்றனர்.

விஷாலை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் அந்தப் படம்தான் மார்க் ஆண்டனி. இந்த படம் டிராப் ஆனது என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் இந்த படம் ட்ராப் ஆகவில்லை. விஷால் இரட்டை வேட ஹீரோவாகவும், எஸ் ஜே சூர்யா இரட்டைவேட வில்லனாகவும் இந்த படத்தில் நடித்து மிரட்ட போகின்றனர்.

எனவே திரில்லர் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கப்பட்டு அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Trending News