வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்யை நம்பினா வேலைக்காகாது.. பெரிய திமிங்கலத்தை லாக் செய்த அட்லி- ஷாருக்கான்

Shah Rukh Khan -Atlee Next Movie: லியோ படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு இரண்டு வருட இடைவெளி எடுக்க பார்க்கிறார். இப்போதைக்கு விஜய் நிறைய பிளான் வைத்திருக்கிறார். 2026 ஆம் ஆண்டு அரசியலில் களம் காண வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுகிறார்.

இதற்கிடையில் தளபதியின் ஆஸ்தானை இயக்குனரான அட்லி எப்படியாவது மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் பண்ண பார்க்கிறார். ஆனால் அட்லி இனிமேல் விஜய்யை நம்பி பிரயோஜனம் இல்லை என்று ஒதுங்கி விட்டார். தளபதி 68 பட வாய்ப்பு அட்லிக்கு தான் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.

Also read: அரசியல் பிளானோடு காத்திருக்கும் 5 நடிகர்கள்.. 2026 தேர்தலை நோக்கி நகரும் தளபதி

ஆனால் அதுவும் கையை விட்டுப் போனதால் இவரை நம்பினா வேலைக்காகாது என்று பெரிய திமிங்கலத்திற்கு வலை விரித்து இருக்கிறார். இப்பொழுது ஜவான் கூட்டணி மீண்டும் கை கோர்த்து இருக்கின்றனர். ஜவான் படத்திற்குப் பிறகு அட்லி- ஷாருக்கான் மீண்டும் இணைகிறார்கள்.

ஷாருக்கான் இந்த படத்தில் உலக நாயகன் நடிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார். இந்த படம் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட். அதனால் ஷாருக்கான் மற்றும் உலக நாயகன் இருவருக்கும் இந்த படத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

Also read: இந்த வாரம் ஓடிடிக்கு வரும் 6 படங்கள்.. ஆயிரம் கோடி வசூல் செய்ய முடியாமல் திணறிய லியோ

இந்த கதையை கமலஹாசன் இடமும் சொன்னால் நிச்சயம் அவர் ஒத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை ஷாருக்கானுக்கு இருக்கிறது. இப்போது கமலுக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் வேலையில் அட்லி இருக்கிறார். திமிங்கலம் மீது கண் வைத்து ஷாருக்கான் பலே திட்டம் போட்டு பிசினஸ் பண்ண பார்க்கிறார்.

Trending News