வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம் கையில் இருக்கும் 4 படங்கள்.. இளம் இயக்குனர்களை லாக் பண்ணிய சியான்

Vikram Upcoming Movies: ஆரம்பத்தில் விக்ரமுக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டதால் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் அளவிற்கு பல படங்களை கையில் எடுத்து அதில் வெற்றி பெற்றார். அதிலிருந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டரையும், கெட்டப்புகளையும் போட்டு மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை அவருக்கென்று தக்க வைத்தார்.

அதனாலே விக்ரம் நடிப்பு என்று வந்தால் விஸ்வரூபம் எடுத்து விடுவார் என்பது போல் மொத்த டெடிகேஷன் கொட்டி நடித்து விடுவார். ஆனால் சமீப காலமாக அவர் நடித்த படங்கள் எல்லாம் பெயிலியர் ஆகிக்கொண்டே வருகிறது. அதனால் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். ஆனாலும் அதிர்ஷ்டம் அவருக்கு கை கொடுக்கவில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் கலையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் தோல்வியை சந்தித்து விட்டது. ஆனாலும் அடுத்தடுத்த படங்கள் மூலம் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளம் இயக்குனர்களை லாக் செய்து இருக்கிறார்.

தற்போது எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பகுதி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் முதல் பகுதியை ஆரம்பிக்கவில்லை அதற்குள் நேரடியாக இரண்டாம் பகுதிக்கு போயிருக்கிறார். அந்த வகையில் ஏதாவது பல சூட்சமங்களை வைத்து வெற்றியை கொடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணுவது போல் தெரிகிறது. அத்துடன் இயக்குனர் அருண்குமார் இதற்கு முன் இயக்கிய பண்ணையாரும் பத்மினியும், சித்தா போன்ற படங்கள் வெற்றி பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் வீர தீர சூரன் படமும் விக்ரமுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து மண்டேலா, மாவீரன் படத்தை எடுத்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் படம் பண்ணுவதற்கு கமிட் ஆகியிருக்கிறார். அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் இயக்கத்தில் வெளிவந்த பார்க்கின் படத்தை எடுத்த ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிப்பதற்கு கதை கேட்டு வைத்திருக்கிறார்.

அந்த கதையும் விக்ரமுக்கு பிடித்துப் போனதால் அடுத்து அவருடன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் கொரனா காலத்தில் துவங்கப்பட்ட கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிய துருவ நட்சத்திரம் படமும் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் பண்ண முடியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் தாமதமாகி கொண்டு வருகிறது. அதனால் இந்தப் படமும் கூடிய விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News