Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டைக்குப் பிறகு சூர்யாவின் அடுத்த ‘மெகா’ பிளான்; அடுத்தடுத்து கைகோர்க்கும் 3 மாஸ் இயக்குநர்கள்!

பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டைக்குப் பிறகு சூர்யாவின் அடுத்த ‘மெகா’ பிளான்; அடுத்தடுத்து கைகோர்க்கும் 3 மாஸ் இயக்குநர்கள்!

சூர்யாதான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்.இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மன்னனாகக் கலக்கியிருக்கும் அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


முதலாவதாக,இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 49’.வித்தியாசமான கதைக்களங்களையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் திரையில் கொண்டு வருவதில் தனித்துவம் பெற்ற இவருடன் சூர்யா இணைவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


அடுத்ததாக,இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு 2’படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.தனது 50-வது படம் என்பதால்,இப்படத்தை ஒரு மைல்கல் படமாக மாற்ற வேண்டும் என்பதில் சூர்யா அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில்,‘மண்டாடி’படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூர்யா தனது 51-வது படத்திலும் நடிக்கவுள்ளார்.


இப்படி அடுத்தடுத்து மூன்று முக்கியமான இயக்குநர்களுடன் சூர்யா கைகோர்த்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஒவ்வொரு திரைப்படமும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.