புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் சேதுபதி பட வாய்ப்பை தட்டி தூக்கிய விஜயகாந்தின் வாரிசு? காற்றில் பறந்த விஷாலின் வாக்குறுதி

After the death of Vijayakanth, Shanmuga Pandian will get more opportunities: சினிமா துறையில் நெப்போடிஸம் தலைவிரித்து ஆடியபோதும், அதை திரைத்துறையினரின் கண் கொண்டு பார்க்கும்போது ஒரு விதம் நியாயம் வெளிப்படவே செய்கிறது.  

தனக்குபின் தன்னுடைய வாரிசுகள், தான் விரும்பிய துறையில் சாதிக்க நினைப்பது எந்த வகையில் தவறு என்ற கேள்விக்குறியே எழுப்புகிறது.

தமிழ் திரை உலகத்திற்கு தன்னால் முடிந்ததை விட அதிகமாகவே  செய்தவர் கேப்டன் விஜயகாந்த். அவர் உயிருடன் இருக்கும் போது, மகன் சண்முக பாண்டியன் தன்னைப் போல் ஒரு சிறந்த நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அது முடியாமல் போனது.

சண்முக பாண்டியன் சில படங்களில் நடித்திருந்த போதும் அவரது வெற்றி சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

விஜயகாந்திற்கு நெருக்கமானவர்கள் மற்றும் தமிழ் திரையுலக அன்பர்கள்  சிலர், கேப்டனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, சண்முக பாண்டியனுக்கு பல வாக்குறுதிகளை அளித்தனர்.

அதிலும் முக்கியமாக ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் அவர்கள் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறினர்.

தற்போது இயக்குனர்கள் பொன்ராம்,காக்கா முட்டை மணிகண்டன் மற்றும் ராஜுமுருகன் ஆகியோர் சண்முக பாண்டியனை அணுகி கதை கூறி வந்துள்ளனர்.

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன்

முதலாவதாக பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததிரைப்படத்தில்,சண்முக பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் தோன்ற உள்ளார்.

ஏற்கனவே பொன்ராம், சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கண்ட இரண்டு படங்களிலும் டைமிங் காமெடியில் பின்னி பெடல் எடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தார் இயக்குனர் பொன்ராம்.  

அதேபோல் மீண்டும் ஒரு தரமான வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கும் இந்த இயக்குனருடன் சண்முக பாண்டியன் இணைவது அவரது திரை வாழ்க்கைக்கு பெரியதொரு மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நடிகர் சங்கத்திற்கு கேப்டன் பெயர் வைக்கப் போராடும் விஷால், அவரது  மகன் சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பேன் என்று கூறிய வாக்குறுதி என்ன ஆச்சு? காற்றோடு போச்சு..!

Trending News