வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

ராயன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்.. விஜய்யின் நாயகி அஜித்தின் வில்லனுடன் புது கூட்டணி

Dhanush Direct Upcoming Movies: கமலுக்கு அடுத்தபடியாக தனுஷ், ஹீரோ பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முகத் திறமைகளை வைத்து சினிமாவிற்குள் தொடர்ந்து வெற்றியை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார்.

இப்படத்தின் வெற்றிக்கு கிடைத்த வெகுமானமாக கலாநிதி மாறன் தனுஷுக்கு நடிகர் மற்றும் இயக்குனராக தனித்தனியான சம்பள செக்குகளை கொடுத்து கௌரவித்திருக்கிறார். இதற்கிடையில் தனுஷ், நிலவுக்கு என் மேலே என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

பிரேக் விடாமல் இயக்குனராக களமிறங்கி வரும் தனுஷ்

இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவர இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே இந்த படத்தில் இருந்து வெளிவந்த ஸ்பாரோவ் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பறந்து திரும்புகிற பக்கமெல்லாம் கேட்கும் படி முணுமுணுக்க வைத்து விட்டது. இதனால் இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஹீரோவாகவும் குபேரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தனுஷ் இயக்கம் நான்காவது படத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். இப்பிடத்திற்கு இட்லி கடை என்னும் டைட்டிலை வைத்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் நேற்று தேனியில் துவங்கப்பட்டிருக்கிறது. அங்கே கிட்டதட்ட முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடக்கப்போகிறது.

இதில் முக்கிய கேரக்டரில் தனுஷ் நடிக்கப் போகிறார். இதில் வில்லனாக அருண் விஜய் கமிட் ஆகி இருக்கிறார். அத்துடன் முக்கியமான கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடிக்கிறார். இதில் ஹீரோயின் ஆக நடிப்பதற்கு நித்யா மேனன் இடம் பேச்சுவார்த்தை போயிருக்கிறது. அவரும் தனுஷ் உடன் ஏற்கனவே நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றியை கொடுத்ததால் இந்த படத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே ராயன் படத்தை ஒரு ஆக்சன் அதிரடி படமாக கொடுத்ததினால் இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதையாகவும் முழுக்க முழுக்க குடும்பங்களுடன் சேர்ந்து ரசிக்கும் படியான கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதுமே தனுசுக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்வதற்கு ஏற்ப இந்த படத்தின் மூலமும் இயக்குனராக அடுத்த கட்ட லெவலுக்கு சென்று வெற்றி பெறுவார்.

Trending News