Lokesh Coolie: லோகேஷ் எடுக்கக்கூடிய படங்களில் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் மர்மமான முறையில் முடிச்சு இருப்பது போல் இருக்க வேண்டும் என்பதற்காக சஸ்பென்ஸ் நிறைந்த LCU கதையாக எடுத்துக் கொண்டே வருகிறார். ஆனால் இவர் வந்த பிறகுதான் எல்லா படங்களும் அடிதடியும் வன்முறையும் அதிகமாக காணப்படுகிறது என்பதற்கு ஏற்ப மாஸ்டர், லியோ, விக்ரம், கைதி போன்ற படங்களில் ஏகப்பட்ட வன்முறைகளை பார்க்க முடிகிறது.
இதனை தொடர்ந்து தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தையும் இயக்கி வருகிறார். அந்த வகையில் வழக்கம் போல் இந்த படமும் வன்முறைக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அதிகமாகத் தான் இருக்கும். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.
லோகேஷ் படத்தை நிராகரித்த ஸ்டார் ஹீரோ
தங்க கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் ரஜினியின் பழைய டயலாக் மற்றும் பாடல்களை கொடுத்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக கொண்டு வந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அதன்படி சுருதிஹாசன், சத்யராஜ், மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.
இதில் ரஜினிக்கு ஏற்ற வில்லனாக நடிப்பதற்கு ஆரம்பத்தில் பல பெயர்கள் அடிபட்டது. லோகேஷ் படத்தை பொறுத்தவரை வில்லனாக நடிப்பவர் பிரபலமாகவும் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கக் கூடியவர். அதனால் தான் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியும், லியோ படத்தில் சஞ்சய் தத் இவர்களின் வில்லத்தனத்தை வைத்து படத்தை மெருகேற்றினார்.
அதேபோல் ரஜினியின் கூலி படத்திலும் யாரும் எதிர் பார்க்காத அளவிற்கு ஒரு வில்லனை கொண்டு வர வேண்டும் என்று தெலுங்கில் நடிப்பு கிங் ஆக இருக்கும் நாகார்ஜுனாவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்திருக்கிறார். ஆனால் நாகார்ஜுனா, இது லோகேஷ் கதை ரஜினி நடிக்கிறார் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படத்தை நிராகரித்திருக்கிறார்.
அவர் நிராகரித்ததற்கான காரணம் என்னவென்றால் வில்லன் கேரக்டரில் நடித்தால் ஸ்டார் ஹீரோவாக இருக்கும் இமேஜ் போய்விடும் என்ற நோக்கத்தில் மறுத்திருக்கிறார். அது எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சரி என்னுடைய ட்ராக் இதுதான் என்று தீர்மானத்துடன் நடித்துக் கொண்டு வருகிறார் நாகார்ஜுனா. தற்போது இவர் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்திலும், நா சாமி ரங்கா படத்திலும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
ரஜினி மற்றும் லோகேஷ் செய்யும் தரமான செயல்கள்
- வனிதா மகள் ஜோவிகாவுக்கு செய்யாததை ஸ்ரீ ஹரிக்கு செய்த ரஜினி
- டில்லியை வைத்து ஆட்டம் காட்ட போகும் லோகேஷ்
- வேட்டையனுக்கு ஆட்டம் காட்ட வரும் சிறுத்தை