வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரொம்ப சீக்ரெட்டாய் விஜய் சேதுபதியை வளைத்து போட்ட நடிகை.. ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி வரிசையில் தெறிக்க விடும் அம்மணி

நடிகர் விஜய்சேதுபதி இன்றைய டாப் ஹீரோக்களில் முன்னிலையில் இருப்பவர். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. விஜய் சேதுபதி பல வருடங்களாக துணை நடிகராக இருந்தவர். 2012 ஆம் ஆண்டு இயக்குனர் சீனு ராமசாமி ‘தென்மேற்கு பருவகாற்று’ என்னும் படத்தின் மூலம் விஜய் சேதுபதியை ஹீரோ ஆக்கினார். விஜய் சேதுபதியும் தனக்கென்று கோலிவுட்டில் ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.

விஜய் சேதுபதி அவர் கஷ்டப்பட்ட காலங்களில் யாரெல்லாம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்களோ அவர்களுக்கு எல்லாம் இப்போது உதவி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது யாரெல்லாம் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்களோ அந்த இயக்குனர்களுக்கு அவ்வப்போது படம் பண்ணி கொடுக்கிறார். இப்படி மொத்த கோலிவுட்டும் கொண்டாடும் விஜய் சேதுபதியை சுற்றி ஒரே ஒரு சர்ச்சை மட்டும் தான் இன்றுவரை இருக்கிறது.

Also Read: உடல் மண்ணுக்கு உயிர் சினிமாவிற்கு.. உடல்நிலை சரியான உடனே விஜய் சேதுபதியை தேடிச் சென்ற கமல்

அதாவது விஜய் சேதுபதி குறிப்பிட்ட ஹீரோயின்களுக்கு மட்டும் தான் தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுக்கிறார் என்பதே. அதில் முதலிடத்தில் இருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகை காயத்ரி. இவர்கள் இருவரில் ஒருவர் தான் விஜய் சேதுபதியின் படங்களில் நடிப்பார்கள். இப்போது இந்த வரிசையில் புதிய ஹீரோயின் ஒருத்தர் சிக்கியிருக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார். இதில் சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். இதில் இவருக்கு மனைவிகளாக மகேஸ்வரி, மைனா நந்தினி மற்றும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நடித்திருந்தனர்.

Also Read: கமலும் இல்லை, விஜய் சேதுபதியும் இல்லை.. டாப் ஆக்டரை பிடித்த வினோத்

இதில் ஷிவானி மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் DSP திரைப்படத்தில் போலீசாக நடித்திருக்கிறார். விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் படத்தில் மீண்டும் ஷிவானி நடித்திருப்பது தான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது. நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் காயத்ரியை தொடர்ந்து ஷிவானியும் இந்த வரிசையில் இணைந்துவிட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் முதலில் விஜய் டிவியின் நாடங்களில் நடித்து கொண்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்ற ஷிவானி, பாலாஜியுடன் கிசுகிசுக்கப்பட்டார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு ஷிவானி முதலில் நடித்த திரைப்படம் தான் விக்ரம்.

Also Read: வினோத் படத்தில் ஏற்பட்ட குழப்பம்.. கமல் செய்ததை மறந்து பெரிய மனிதராக நடந்து கொள்ளும் விஜய் சேதுபதி

Trending News