சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

ஒரே ட்ரெய்லரில் பயத்தை காட்டிய துணிவு அஜித்.. மொத்தத்தையும் மாத்த போட்ட திட்டம்

நடிகர் அஜித் நடிப்பில் வரும் பொங்கலன்று ரிலீஸாகவுள்ள துணிவு படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி புத்தாண்டுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. ட்ரைலர் முழுவதும் துப்பாக்கியுடன் புன்னகைத்து வலம் வரும் அஜித்தின் காட்சிகள் தெறிக்கவிட்டுள்ளனர். ட்ரைலரை பார்த்த அஜித் ரசிகர்கள் சற்று குதூகலத்தில் துணிவு படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

இதனிடையே துணிவு பட ட்ரைலரை பார்த்த விஜய் ரசிகர்களும் ,வாரிசு பட ட்ரைலருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் துணிவு பட ட்ரைலரை கண்ட வாரிசு படக்குழு சற்று மிரண்டு போய் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் துணிவு படம் வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் வாரிசு படம் வம்சியின் கை வண்ணத்தில் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Also Read : வங்கி கொள்ளையே இல்ல துணிவு.. கதையில் வினோத் வச்ச ட்விஸ்ட்

இதனிடையே விஜயின் வாரிசு பட ட்ரைலரில் மாஸ் ஆக்ஷன் காட்சிகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள் இடம் பெறுவது என்பது சந்தேகம் தான். இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை தன் மகன்,மகளுடன் கொண்டாட லண்டன் சென்றுள்ள விஜய், துணிவு பட ட்ரைலரை பார்த்துவிட்டு வாரிசு படக்குழுவுக்கு போன் மூலமாக வாரிசு பட ட்ரைலரில் மாற்றம் செய்யுமாறு கூறி வருகிறாராம்.

வாரிசு பட ட்ரைலர் ஏற்கனவே ரெடியாக உள்ள நிலையில், முழு ட்ரைலரையும் துணிவு படத்திற்கு ஏற்றார் போல் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணிவு பட ட்ரைலரில் ஒரு இடத்தில் கூட செண்டிமெண்ட்,சோக காட்சிகள் இடம்பெறவில்லை. ஆனால் படத்தில் இந்த காட்சி தான் சஸ்பென்ஸ் காட்சிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரிசு பட ட்ரைலரில் குடும்பக்காட்சிகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : அடுத்தடுத்து வெளியான துணிவு படத்தின் கேரக்டர்கள்.. மொத்த சஸ்பென்சை உடைத்த படக்குழு

இதற்கும் மேலாக விஜய் வாரிசு பட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில், விஜய் பேசுகையில் நான் தான் எனக்கு எப்போதும் எதிரி என அஜித்தை மறைமுகமாக பேசினார். இதற்கு இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த அஜித், தற்போது துணிவு பட ட்ரைலரில் பதிலடி கொடுக்கும் வகையில் மாஸான வசனத்தை பேசியுள்ளார். இந்த வசனத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் வாரிசு பட ட்ரைலரில் மாற்றம் செய்யப்பட்டு டயலாக்குகள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் வசனத்திற்கு விஜயின் பதிலடி என்னவாக இருக்கும் என மொத்த கோலிவுட் வட்டாரமே தற்போது வாரிசு பட ட்ரைலருக்கு காத்துக் கொண்டிருக்கிறது. துணிவை விட வாரிசு ட்ரைலர் மாஸாக இடம்பெற வேண்டி, அப்படக்குழுவினர் சற்று நாட்கள் எடுத்துக்கொண்டு கூட படத்தின் ட்ரைலரை வெளியிட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : வெளிநாடுகளில் வசூல் வேட்டையாடிய விஜய்.. ரிலீசுக்கு முன்பே துணிவை விட 2 மடங்கு கல்லா கட்டிய வாரிசு

Trending News