வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

அவதூறாக பேசியதால் ஆக்ரோஷமான மீனா.. குஷ்பு சொன்ன ஒத்த வார்த்தை அரண்டு போன இணையவாசிகள்

Meena and Kushboo: 90ஸ் ஹீரோயின்கள் என்று எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் இப்பொழுது வரை ரசிகர்கள் விரும்பி ரசித்து ஏங்கிக் கொண்டு வரும் நடிகை யார் என்றால் அது கண்ணழகி மீனா தான். இவருடைய நடிப்பு, அழகு, பேச்சு, டான்ஸ், கண்சிமிட்டு அழகு, சிரிப்பு இப்படி இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு 90ஸ் கனவு தேவதையாக எல்லோர் மனதையும் கொள்ளையடித்தவர்.

அதிலும் ரஜினியுடன் எத்தனையோ ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் ரஜினி மீனா கெமிஸ்ட்ரி சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் சேர்ந்து நடித்த படங்கள் ஆன வீரா, முத்து மற்றும் எஜமான் அனைத்தும் எவர்கிரீன் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி அங்கிள் என்று ஒரு காந்தக் குரலுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தாலும் அவருக்கே ஜோடி போட்டு நடித்த பெருமை கண்ணழகிக்கு தான் சேரும்.

ஆக்ரோஷமாக பொங்கிய மீனா

ரஜினிக்கு மட்டுமல்ல கமல், பிரபு, சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த் போன்ற ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே பெஸ்ட் ஹீரோயின் மீனா தான். இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக சிறந்த நடிகை. அதனால் தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பெரும் புகழையும் அடைந்து ஒரு சாதனை படைத்த நடிகையாக வெற்றி பெற்றிருக்கிறார். இப்படி இவரைப் பற்றி வர்ணித்துக் கொண்டு போகலாம் அந்த அளவிற்கு ஒரு மென்மையான நடிகை.

இப்படி ஹீரோயினாக கொடி கட்டி பறந்த மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது இந்த குழந்தையும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வருகிறது. இந்த சூழலில் மீனாவின் கணவர் வித்தியாசாகருக்கு நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் மீனா, ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மீனாவை பற்றிய பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது மீனா கூடிய விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

அதுவும் பிரபல முன்னணி நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் அவரைத்தான் இரண்டாவது ஆக திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று இணையத்தில் மீனாவை பற்றி அவதூரான பேச்சுக்கள் போய்க் கொண்டிருக்கிறது. இதனை பார்த்து ஆக்ரோஷமான மீனா, வதந்திகளை பரப்புபவர்கள் முட்டாள்கள் ஆக தான் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக நான் அவர்களை வெறுக்கிறேன்.

முட்டாள்கள் தான் என்ன பண்ணுகிறோம் என்று தெரியாத அளவிற்கு ஒரு விஷயத்தை செய்வார்கள். அது போல தான் இந்த அவதுரையும் நான் பார்க்கிறேன் என்று ஆக்ரோஷமான கோபத்தை வெளிக்காட்டும் விதமாக எக்ஸ் தளத்தில் மீனா பதிவிட்டு இருக்கிறார். இவருக்கு சப்போர்ட்டாக குஷ்பூவும் ஒத்த வார்த்தையில் ஆதரவு கொடுத்து இருக்கிறார்.

அதாவது பெண்களுக்கு எப்போதுமே தைரியம் இருக்க வேண்டும். இதையெல்லாம் நம் கண்டுக்காமல் கடந்து போக வேண்டும் என பதிவிட்டு இருக்கிறார். இப்படி இவர்கள் இரண்டு பேரும் கொடுத்த பதிலடியில் வதந்தியை பரப்பிய இணைவாசிகள் அரண்டு போயிருக்கிறார்கள்.

குஷ்பூ மற்றும் மீனாவை பற்றிய செய்திகள்

- Advertisement -spot_img

Trending News