ஏரியா வாரியா கண்டிஷன் போட்ட ஏஜிஎஸ்.. லியோ, இந்தியன் 2வால் வந்த பயம்

Goat: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் படம் உருவாகி இருக்கிறது. ஏஜிஎஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்களும் வெளியாகிவிட்டது. விரைவில் மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. இதை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க கோட் பெரிய அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தாமல் சைலண்டாக இருக்கிறது.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் குறையாக உள்ளதாம். ஏனென்றால் லியோ படம் ஆரம்பித்தபோது சோசியல் மீடியாவே பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அப்டேட் வந்து போதும் போதும் என சொல்லும் அளவுக்கு திணற வைத்தது.

ஆனால் கோட் பட நிலமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் தயாரிப்பு தரப்பின் கண்டிஷன் தான். கோட் பட தமிழக தியேட்டர் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் 80 கோடிக்கு வாங்கி இருப்பது அனைவரும் அறிந்த கதை தான்.

லியோவால் சுதாரித்த அர்ச்சனா

ஆனால் அதன் பிறகு ஏரியா வாரியாக எவ்வளவு விற்பனையானது என்ற தகவல்கள் எதுவும் வரவில்லை. ஏனென்றால் ஏஜிஎஸ் தமிழக உரிமையை ராகுலுக்கு விற்கும்போதே ஏரியா வாரியாக வேறு யாருக்கும் விற்கக் கூடாது என கண்டிஷன் போட்டு விட்டதாம்.

இதற்கு முக்கிய காரணம் ஏரியா வாரியாக கைமாறும் போது அதிக விலைக்கு விற்பனையாகலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் கோட் ஒரு வேளை எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் நேரடியாக தயாரிப்பாளரிடம் தான் வருவார்கள்.

அதனாலேயே இப்படி ஒரு கண்டிஷனை ஏஜிஎஸ் போட்டிருக்கிறது. மேலும் படம் பற்றிய ஆர்ப்பாட்டம் எதுவும் இருக்கக் கூடாது என்பதும் முக்கிய உத்தரவு. இப்படித்தான் இந்தியன் 2 ரிலீஸ் ஆவதற்கு முன்பு பயங்கர அளப்பறையாக இருந்தது.

எங்கு திரும்பினாலும் இந்தியன் தாத்தா வராரு சேனாபதி வராரு என்ற கூச்சல்கள் தான் இருந்தது. ஆனால் படம் வெளிவந்த பிறகு அது எந்த அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

அப்படி ஒரு நிலை வர வேண்டாம் என்பதற்காகவே இந்த முடிவு. படம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்கள் வந்து அதை கொண்டாட வேண்டும். அதுவே வசூலையும் ஆடியன்ஸையும் அதிகரிக்கும். இதை நன்றாக தெரிந்து வைத்துள்ள அர்ச்சனா கோட் படம் குறித்த ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து வருகிறாராம்.

ஆர்ப்பாட்டமே இல்லாமல் அடக்கி வாசிக்கும் கோட்

Next Story

- Advertisement -