ஆகஸ்ட் 19 கோட் படத்தின் டிரைலர் வெளிவர இருந்தது, ஆனால் இப்பொழுது அதை ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு வெளியிடும்படி தயாரிப்பாளர் தரப்பு வெங்கட் பிரபுவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறதாம். தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களால் இதை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்த படத்தில் டிரைலரை ஏஜிஎஸ் பல கண்டிஷன்களுடன் போட்டுக் காட்டும் படி கேட்டிருக்கிறது. படத்தில் வரும் அனைத்து பிரம்மாண்ட விஷயங்களிலும், டிரைலரில் எதிர்பார்ப்பு கிளப்பும் படி அமைக்க உத்தரவு போட்டிருக்கிறது. படத்துக்கு இதுவே ஒரு பிரமோஷன் ஆக அமைய வேண்டும் எனவும் கூறி இருக்கிறதாம்.
லியோ படத்தால் வந்த தலைவலி
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் செய்ததை எல்லாம் இதில் செய்ய வேண்டாம். ட்ரெய்லரிலும், படத்திலும் மக்கள் எதையும் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. அவர்களை 100% திருப்தி படுத்த வேண்டும் எனவும் ஏஜிஎஸ் பல நிபந்தனைகளை வைக்கிறது.
வெங்கட் பிரபு இதனால் மீண்டும் ஒரு முறை ட்ரெய்லர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தயாரித்து வருகிறார். படத்தில் யுவனின் இசை வேற லெவலில் இருக்கிறதாம். ஏற்கனவே ரீ ரெகார்டிங் வேலைகளில் யுவன் மிரட்டி விட்டாராம்.
கடந்த வாரம் வெளிவந்த மூன்றாவது சிங்கிளில் கடும் அப்செட்டில் இருந்த யுவன் ரீ ரெக்கார்டிங்கில் செம்மையாய் செய்து விட்டாராம். இதனால் வெங்கட் பிரபு பயங்கர குஷியில் இருக்கிறாராம். ஏற்கனவே ஏஜிஎஸ் தரப்பிற்கு படத்தை போட்டு காட்டி மிரட்டி விட்டார் வெங்கட் பிரபு.
- வாயை பிளக்க வைத்த GOAT டிஜிட்டல், தியேட்டர் உரிமை விற்பனை
- GOAT பட நடிகர்களின் சேலரி மற்றும் பட்ஜெட்
- GOAT படத்தில் விஜயகாந்த் வருவாரா இல்லையா