சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கேஸ் பாய்ந்ததால் பயோபிக் கதையை விட்டு ஓடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. தங்கம் வென்ற வரலாறு நாசமா போன கதை

பயோபிக் கதைகள்- ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக எடுப்பதை இப்பொழுது தமிழ் சினிமா ஃபேஷன் ஆக மாற்றி வருகிறது. தோனி “தி அன் டோல்ட் ஸ்டோரி” படம் சக்கை போடு போட்டதால் அடுத்தடுத்து நிறைய பயோ பிக் படங்கள் சினிமாவில் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம் கூட ராணுவத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதைதான். இப்படி அடுத்தடுத்து தமிழில் நிறைய பயோ பிக் படங்கள் வர இருக்கிறது. வ உ சி கப்பலோட்டிய தமிழன் கதையில் ஆரம்பித்து மகாத்மா காந்தி, பெரியார், காமராஜ், தோனி வரை நீண்டு கொண்டே போகிறது இந்த லிஸ்ட்.

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பு தடகள வீரர் மாற்றுத்திறனாளி மாரியப்பன் தங்கவேலுவின் கதையை பயோபிக்காக எடுக்க திட்டமிட்டு இருந்தார். பாதி ஸ்கிரிப்டுக்கு மேல் எழுதிய பின்பு அந்த படம் கைவிடப்பட்டது. அந்த வீரர் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். அதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரச்சனை வேண்டாம் என ஒதுங்கி விட்டார்.

தங்கம் வென்ற வரலாறு நாசமா போன கதை

மாரியப்பன் தங்கவேலு சேலத்தைச் சேர்ந்தவர். இந்தியாவிற்காக 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி பிரிவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வாங்கித் தந்தார். அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி பரிசையும் வென்று கொடுத்தார்.இவருடைய வரலாற்றை தான் திரைப்படமாக எடுப்பதாக இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதனிடையே மாரியப்பன் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார். மாரியப்பன் புதிதாய் வாங்கிய மகேந்திரா கார் மீது வாலிபர் ஒருவர் பைக்கில் வந்து இடித்ததாகவும், 3 நண்பர்களுடன் மாரியப்பன் அந்த வாலிபரிடம் சண்டை போட்டதாகவும், அதன் பின்னர் அந்த வாலிபர் ரயில்வே தண்டபாளையத்தில் இறந்து கிடந்ததால் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Trending News