சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இதுல கூட தனுஷ் இருக்கக் கூடாது.. வழக்கத்தை மாற்றி அதிரடி காட்டிய ஐஸ்வர்யா

சினிமா பிரபலங்கள் விவாகரத்து என்றால் அதனை பெரிது படுத்தி வருகிறது சமூக ஊடகங்கள். முதலில் சமந்தா, நாக சைதன்யா விவகாரத்தை செய்வதை சினிமா வட்டாராம் பெரிதாக பேசினர். அதன்பிறகு தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் பலரும் நல்ல நட்சத்திரங்களை ஏன் பிரிகிறார்கள் என கூறிவந்தனர்.

ரஜினிகாந்த் சமீபகாலமாக ஐஸ்வர்யாவிடம் தனுஷ்டமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சிறுசிறு பிரச்சினைகள் எல்லாம் விவாகரத்து பெற்றால் இந்த உலகில் யாரும் வாழ முடியாது முதலில் உங்கள் குழந்தைகளை நினைத்து பாருங்கள் யாத்ரா, லிங்கா இருக்கும் பொழுது நீங்கள் விவாகரத்து பெற்றால் அவர்களது எதிர்காலம் என்ன ஆகும் என யோசித்துப் பார்த்தீர்களா என்று ரஜினிகாந்த் இரு தரப்பினரிடமும் கூறியுள்ளார்.

அதனால் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் இணைய வாய்ப்பு உள்ளது என பலரும் கூறி வந்தனர். மேலும் இவர்களுக்குள் இருப்பது சிறிய கோபம் தான். அது சீக்கிரமாக குறைந்து இவர்கள் இருவரும் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவார்கள் என அவரது நெருங்கிய நண்பர்கள் கூறி வந்தனர்.

ஆனால் தனுஷ் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யாவும் பல பாடல்களை தயாரித்து வருகிறார். அதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பற்றி தற்போது வரை எந்த ஒரு முடிவு எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

தற்போது ஐஸ்வர்யா ஒரு ஆல்பம் காதல் பாடலை தயாரித்து வருகிறார். தற்போது இந்த பாடலை உடைய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ற பெயரை குறிப்பிட்டபடி அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டு உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இத்தனை நாட்களாக ஐஸ்வர்யா தனுஷ் இருந்த பெயரை தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி உள்ளதால் இவர்கள் இருவரும் இனி சேர வாய்ப்பில்லை என கூறி வருகின்றனர்.

ஆனால் ஐஸ்வர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது வரை ஐஸ்வர்யா தனுஷ் என்றுதான் பெயர் வைத்துள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது, கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என கூறி ரசிகர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

Trending News