Arjun: சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கரம்பிடித்துள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன்.

ரொம்பவும் க்யூட்டாக இருந்த இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள் மீடியாவே கலக்கியது. அதை தொடர்ந்து அர்ஜுன் திரையுலக பிரபலங்களுக்காக பிரம்மாண்ட திருமண வரவேற்பு ஒன்றையும் நடத்தினார்.

அதில் தமிழக முதல்வர் உட்பட பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதையடுத்து மீண்டும் ஒரு திருமண பார்ட்டி நடைபெற்றுள்ளது.
அர்ஜுன் கொடுத்த சீதனம்
இதில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கலக்கலாக உடை அணிந்து நடனமும் ஆடியிருந்தனர். அந்த வீடியோக்களும், போட்டோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அர்ஜுன் தன் மகளுக்காக எவ்வளவு வரதட்சணை கொடுத்துள்ளார் என்ற செய்தியும் கசிந்துள்ளது. அதன்படி அவருக்கு கிட்டத்தட்ட 1000 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருக்கின்றன. அதில் பாதியை அதாவது 500 கோடியை தன் மகளுக்காக அவர் கொடுத்துள்ளாராம்.

அதன்படி போரூரில் விலைமதிப்புள்ள நிலம் மற்றும் ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த கார் என அனைத்தையும் சீதனமாக கொடுத்திருக்கிறார். அது மட்டும் இன்றி மகளுக்காக தங்கம், வைரம், வைடூரியம் என ஏகப்பட்ட நகைகளையும் பார்த்து பார்த்து வாங்கி இருக்கிறார்.
மேலும் மணமக்களுக்கு விலை உயர்ந்த உடைகள், காலணிகள், காஸ்ட்லி வாட்ச் என சகல பொருட்களையும் அவர் கொண்டு வந்து இறக்கி இருக்கிறார். இதுதான் கோடம்பாக்க வட்டாரத்தில் பிரமிப்பு விலகாத நிலையில் பேசப்பட்டு வருகிறது.
மகள் கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்திய அர்ஜுன்
- அர்ஜுன் பொண்ணு தான் மருமகள்
- மகளுடன் நடிக்க மறுத்ததால் பிரஸ் மீட் வைத்து அவமானப்படுத்திய அர்ஜுன்
- வீட்டுக்கு வந்த மகாலட்சுமிக்கு தம்பி ராமையா போட்ட கண்டிஷன்