தனுஷ் ஒருகட்டத்தில் வுண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் அவர் தயாரித்த சில படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய கடனாளி ஆகி விட்டது என்பது தெரிந்த ஒன்றுதான். அதில் இருந்து தற்போது வரை மீற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
தனுஷ் ஆரம்ப காலகட்டங்களில் தயாரித்த படங்கள் ஓரளவு நல்ல வெற்றி பெற்று வந்த நிலையில் கடைசியாக தன்னுடைய மாமனார் ரஜினிகாந்த்தை வைத்து எடுத்த காலா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தினால் அவர் பெரிய கடனுக்கு ஆளானார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
அந்தக் கடனை அடைக்க தான் தற்போது வரை ஏகப்பட்ட படங்களில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இப்போதுதான் அந்த கடன் எல்லாம் முடிந்து அப்பாடா என ஒரு பக்கம் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் அடுத்த அடியும் விழ ஆரம்பித்து விட்டது.
சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்ற நிலையில் மேலும் தனுசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ரஜினி காலா படத்தில் நடித்தபோது அவருக்கு பேசப்பட்ட சம்பளம் தற்போது வரை கொடுக்கவில்லை என ரஜினி குடும்பம் தனுசுக்கு அழுத்தம் தருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
மருமகனின் கடன் சுமையை குறைக்கத்தான் ரஜினி அந்த படத்திலேயே நடித்தார். ஆனால் எதிர்பாராத வகையில் காலா திரைப்படம் தோல்வியடைந்து மேலும் தனுசை கடனாளி ஆக்கியது. இதனால் அந்த படத்திற்காக ரஜினி தற்போது வரை சம்பளம் வாங்கவில்லை.
ஆனால் தற்போது நிலைமை கைமீறி சென்ற நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய அப்பா காலா படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை உடனடியாக எடுத்து வைக்குமாறு தனுசுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் ரஜினி வட்டாரத்தில் இதுதான் பேச்சாக உள்ளது.