வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

யாத்ரா, லிங்காவை வைத்து ஐஸ்வர்யா போட்ட ஸ்கெட்ச்.. தரமான சம்பவம் இருக்கு

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்தனர். இது இவர்கள் குடும்பத்தை தாண்டி ரசிகர்களையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்லாமல் இவர்களையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இரு குடும்பங்களும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்தச் செய்தியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் தங்களது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஐஸ்வர்யா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் தனுஷ் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் நடித்து வருகிறார்.

தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நான் வருவேன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், ஐஸ்வர்யா உடனே எடுத்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது.

தற்போது தனுஷின் மூத்த மகன் யாத்ராவிற்கு 15 வயது ஆகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது மகனை வைத்து படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

சமீபத்தில் நடந்த இளையராஜாவின் இசை கச்சேரியில் தனுஷ் தனது இரு மகன்களுடன் கலந்து கொண்டார். அதில் யாத்ரா தனது தந்தை தனுசை அப்படியே உரித்து வைத்திருந்தார். இதில் யார் தனுஷ் என்று ரசிகர்கள் குழம்பும் அளவிற்கு அண்ணன், தம்பி போல் இருவரும் இருந்தனர்.

இந்நிலையில் யாத்ரா திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்ற செய்தியால் ஐஸ்வர்யா ரசிகர்கள் மட்டுமின்றி தனுஷ் ரசிகர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனால் தாத்தா, தந்தையைப் போல யாத்ராவும் சினிமாவில் ஒரு வலம் வர அதிக வாய்ப்புள்ளது. விரைவில் இதற்கான தகவல் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News