சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிம்புவிற்கு அல்வா கொடுத்த ஐஸ்வர்யா.. எங்க அண்ணனுக்கு தான் வாய்ப்பு

சமீபகாலமாக தன் கணவர் தனுஷை பழிவாங்குவதற்காக ஐஸ்வர்யா சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக செய்திகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியது. ஆனால் தற்போது அது உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஏனென்றால் ஐஸ்வர்யா படம் இயக்கப் போவது உண்மைதான் ஆனால் ஹீரோ சிம்பு கிடையாது.

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது ஐஸ்வர்யாவை சந்தித்து பேசியிருக்கிறார். இவர்கள் இருவரின் சந்திப்பு குறித்த விஷயங்களை லாரன்ஸ் தற்போது தெரிவித்திருக்கிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் அவருடைய குடும்பத்திற்கும் இவர் மிகவும் நெருக்கமான நபர் தான். தற்போது ஐஸ்வர்யாவை சந்தித்து பேசி இருக்கும் லாரன்ஸ், என் தங்கச்சியை பார்த்தது ரொம்ப சந்தோஷம். நாங்கள் சந்தித்த காரணத்தை பற்றி சீக்கிரமே அவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார். அது வரை என்னால் எதுவும் சொல்ல முடியாது.

இந்த சமயத்தில் ஐஸ்வர்யா வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்து விட்டது. அதை பற்றி பேசுவதற்கு எனக்கு உரிமை இல்லை. ஆனால் என் தங்கை எப்பவும் சந்தோசமா இருக்கணும். எனக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தவர் தலைவர். அவருடைய பெண்கள் சந்தோஷமாக இருக்கனும் என்று கூறியுள்ளார்.

மேலும் இவர் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் காலத்திலேயே ரஜினியின் மகள்கள் இருவரையும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் நான் தலைவர் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் தங்கச்சி இரண்டு பேரும் என்னிடம் பாசமாக பேசுவாங்க என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் ஐஸ்வர்யா, ராகவா லாரன்சை வைத்து படம் இயக்க போவது உறுதியாகத் தெரிகிறது. விவாகரத்து முடிவால் மன உளைச்சலில் இருக்கும் தனுஷ் தற்போது நடிப்பின் பக்கம் தன்னுடைய கவனத்தை திசை திருப்பியுள்ளார் அதேபோன்று ஐஸ்வர்யாவும் மீண்டும் இயக்குனராக படம் இயக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை அவர் கூடிய விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News