வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கடைசியில ரஜினி தலையில் விழுந்த பழி.. சுக்குநூறாக உடைந்த ஐஸ்வர்யாவின் மனக்கோட்டை

Rajini-Aishwarya: விவாகரத்து முடிவிற்கு பிறகு ஒரு மனமாற்றத்திற்காக மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதற்கு சப்போர்ட் செய்யும் வகையில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதிக்கவே லால் சலாம் விறுவிறுப்பாக படமானது.

மத நல்லிணக்கத்தை எடுத்துக் கூறும் வகையில் உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால் முதலுக்கே மோசம் போச்சு என்று சொல்லும் வகையில் படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் லைக்கா நிறுவனத்திற்கு பெரும் அடியாகத்தான் இருந்தது.

அது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யாவின் பெயரும் டேமேஜ் ஆனது. மேக்கிங் சரியில்லை திரைக்கதை சொதப்பல் என பகிரங்கமாகவே விமர்சனங்கள் கிளம்பியது. மேலும் சூப்பர் ஸ்டாரை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார் என்ற கருத்துக்களும் பூதாகரமாக வெடித்தது. இது தவிர ஆடியோ லாஞ்சில் ஐஸ்வர்யா கொஞ்சம் ஓவராகவே படத்தை பற்றி புகழ் பாடினார்.

Also read: முதலுக்கே மோசமான லால் சலாம், டஃப் கொடுக்கும் லவ்வர்.. 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

ஆனால் இதற்கு தான் இவ்வளவு அலப்பறையா? என்ற ரீதியில் ரசிகர்கள் விமர்சனம் கொடுத்தனர். இதனால் நொந்து போய் இருக்கும் ஐஸ்வர்யா இதற்கு அப்பா தான் காரணம் என நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம். அதாவது ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டாலும் அது சூப்பர் ஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது.

அதனாலேயே படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மாஸ் குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையெல்லாம் பார்த்த ஐஸ்வர்யா தான் செய்தது தப்போ? என வருத்தப்படுகிறாராம். ஒருவேளை மொய்தீன் பாய் கேரக்டருக்கு வேறு ஒரு நடிகரை கமிட் செய்திருந்தால் நிச்சயம் படம் மக்களை சென்றடைந்திருக்கும்.

படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களும் தெளிவாக புரிந்து இருக்கும் என ஆதங்கப்பட்டு வருகிறாராம். கடைசியில் சூப்பர் ஸ்டார் மேல் தான் அனைத்து பழியும் விழுந்திருக்கிறது. அப்பாவை வைத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடிக்கலாம் என்று நினைத்த ஐஸ்வர்யாவின் மனக்கோட்டையும் தற்போது சரிந்து உள்ளது.

Also read: லைக்கா தலையில் துண்டை போட்ட லால் சலாம்.. ஸ்கோர் செய்த லவ்வர், 4ம் நாள் வசூல் நிலவரம்

Trending News