வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஐஸ்வர்யா ராயை தாக்கினார்.. சல்மான் கானைவிட தாதா பிஷ்னோய் மேலானவர், முன்னாள் காதலி பேட்டி

பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான சோமி அலி சல்மான் கான், தாதா லாரான்ஸ் பிஷ்னோயைவிட மோசமானவர் என தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் சல்மான் கான். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களால் திருவிழா போல் கொண்டாடப்படும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகள் வசூல் குவிக்கும். தொடர்ந்து 30 ஆண்டுகளாக பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வரும் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

அதன்படி, 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஷுட்டிங்கில் பங்கேற்றபோது சிங்காரா மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மான் வேட்டையாடிய சல்மான் கானை தான் கொல்ல இருப்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் தெரிவித்தார். இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது

சமீபத்தில் மீண்டும் லாரன்ஸ் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்திருந்தார். அவரைக் கொல்லவும், அவரது வீட்டை தொடர்ந்து கண்காணிக்கவும் சிறையில் இருந்தபடியே 60க்கும் மேற்பட்ட ஆட்களை அவர் ஏவி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

salman khan, somi ali
salman khan, somi ali

சல்மான் கான் – சோமி அலி, மற்றும் ஐஸ்வர்யா ராய் காதல் விவகாரம்

இதற்கிடையே பாலிவுட் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சோமி அலி அப்போது சல்மானின் காதலியாக அறியப்பட்டு அவருடன் 8 ஆண்டுகள் காதலில் இருந்தார். இதையடுத்து சல்மான் கான் ஐஸ்வர்யா ராயுடன் காதலில் விழுந்தார்.

அதன்பின், சோமி அலி 1999 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். தற்போது அவர் நோ மோர் டியர்ஸ் என்ற என்.ஜி.ஓ அமைப்பினை நிறுவி ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் அவர் ஐ.ஏ.என்.எஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், சல்மான் கான் என்னை துன்புறுத்தினார். அவருடன் தொடர்பில் இருந்த கத்ரின்னா, சங்கீதா ஆகியோர் நான் அனுபவித்த துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டார்கள்.

ஐஸ்வர்யா ராயை அடித்த சல்மான் கான்?

ஐஸ்வர்யா ராயை அவர் மிகவும் துன்புறுத்தினார். இதனால் தோள்பட்டையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின், கத்ரீனாவுடனான தொடர்பின்போது அவரை என்ன செய்தார் என தெரியவில்லை. சல்மான்கான் எனக்கு செய்த துன்பத்திற்கு நான அனுபவித்திருக்கிறேன். அதனால் அதை ஒப்பிடும்போது லாரன்ஸ் பிஷ்னோய் மேலானவர் என நினைக்கிறென் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சல்மான் கான் என்னை கொடூரமாக தாக்கினார். அதில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானேன். இதைக் கேள்விப்பட்டு நடிகை தபு என்னை பார்க்க வாந்தார். அப்போதுகூட சல்மான்கான் என்னைப் பார்க்க வரவில்லை. அவருடனான ரிலேசன்ஷிப்பில் இருந்தபோது நான் அனுபவித்த கொடூரம் என் அம்மா உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.. இதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் பற்றி நடிகை சோமி அலி கூறிய பேட்டி சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மீதான விமர்சனங்கள் பற்றி சல்மான் கான் விளக்கம் அளிப்பாரா? முன்னாள் உலகியும் இதுகுறித்து கருத்து தெரிவிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News