ஐஸ்வர்யாராயுடன் நடிக்க ஆசைப்பட்ட விஜய்.. தளபதியை ரிஜெக்ட் செய்ய உலக அழகி சொன்ன அந்த ஒரு காரணம்

Thalapathy Vijay: நடிகர் விஜய்க்கு இப்போ இருக்கும் புகழுக்கு பல நடிகைகள் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள். விஜய்க்கு தங்கச்சியாகவாது நடித்து விட வேண்டும் என ஆசைப்பட்ட நடிகைகள் கூட உண்டு.

ஆனால் விஜய் நடிக்க ஆசைப்பட்ட நடிகை பற்றி பிரபல பத்திரிக்கையாளர் சவிதா ஜோசப் சொல்லி இருக்கிறார். நடிகர் விஜய் ரொம்பவே நடிக்க ஆசைப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் தான். ஆனால் தமிழில் , அப்போதைய காலகட்டத்தில் அவருடன் இணைந்து நடித்தது பிரசாந்த் மற்றும் அப்பாஸ் தான்.

அதன் பின்னர் பல வருடங்களாக ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டவில்லை. அதன் பின்னர் அவரை மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்தது இயக்குனர் சங்கர் தான். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நீண்ட கால ஆசையை எந்திரன் படம் மூலம் தீர்த்து வைத்தார்.

தளபதியை ரிஜெக்ட் செய்ய உலக அழகி சொன்ன அந்த ஒரு காரணம்

ஐஸ்வர்யா ராயுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என விஜய்க்கும் ஆசை இருந்திருக்கிறது. அவர் நடித்த தமிழன் படத்தில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்று இருக்கிறது. விஜய் இடம் ஐஸ்வர்யா ராயை ஜோடியாக நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி தான் சம்மதமே வாங்கி இருக்கிறார்.

ஆனால் ஐஸ்வர்யா ராய் நான் விஜய் உடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். அதற்கு முக்கிய காரணம் விஜய் தன்னைவிட சின்னப் பையனாக ஸ்கிரீனில் தெரிவார் என்பது தான்.

அதன் பின்னர் ஒரு வழியாக விஜய் இடம் பேசி அந்த உலக அழகி இல்லனா என்ன, சமீபத்தில் வெற்றி பெற்ற உலக அழகியை நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி பிரியங்கா சோப்ராவை அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →