சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

என்னடா இது புதுசு புதுசா புரளியை கிளப்புறீங்க.! ஐஸ்வர்யா ராய் விவாகரத்தில் வெளியான சீக்ரெட்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனும் பிரிந்து விட்டனர் என்று அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது. அவர்களும் இதற்கு பதிலளித்து சலித்து போயிருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் உண்மையை போட்டு உடைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலகை அழகியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். ஹிந்தி ,தமிழ் ,பெங்காலி மற்றும் ஆங்கில உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலமாகத்தான் ஐஸ்வர்யா ராய் திரையுலகிற்கே அறிமுகமாகி இருந்தார். அதை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க நட்சத்திர நடிகையாக மாறினார்.

பிரபல நடிகர் ஆன விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் உடன் காதலித்து அவர்களுடன் நெருக்கமாக பழகி லிவிங் லைஃப் வாழ்ந்ததாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் திடீரென ஒருநாள் அபிஷேக் பச்சனுடன் காதல் வயப்பட்டு, அவரையே திருமணம் செய்து, அமிதாப் பச்சனுக்கு மருமகளாக மாறினார்.

முதலில் அமிதாப் பச்சனுக்கு ஐஸ்வர்யாவை மருமகளாக ஏற்று கொள்வதில் விருப்பமே இல்லை. அபிஷேக் பச்சன் ஆடம் பிடித்து திருமணம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த அவர் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், ரன்பீர் கபூருடன் எ தில் ஹை முஷ்கில் படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்ததை தொடர்ந்து, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து, இவர்கள் இருவரும், எந்த நிகழ்ச்சிகளில் தம்பதிகளாக வருவதே இல்லை. அம்பானி வீட்டு திருமணத்தில் கூட ஐஸ்வர்யா ராய் தன் மகளோடு தனியாக தான் வந்தார். இத பார்த்த நெட்டிசன்கள், இவர்கள் பிரிந்து விட்டனர் என்று உறுதியே செய்துவிட்டனர். மேலும், திருமணத்தப்போது, அபிஷேக் போட்ட மோதிரம், ஐஸ்வர்யா விரலில் இல்லை என்பதையும் நோட் செய்துள்ளனர்.

தற்போது, உண்மையை வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். மீண்டும் தன்னுடைய கையில் தன்னுடைய திருமண மோதிரத்தை அணிந்திருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டார் என வெளியான செய்திகளுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

Trending News