வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தனுசுக்கு நோ மணிரத்தினத்துக்கு ஓகே.. ஓரவஞ்சனை செய்த உலக அழகி

தனுஷின் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் தனுஷின் நடிப்பில் வெளியாக உள்ள அடுத்தடுத்த படங்களுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனுஷ் படத்தில் நடித்த மறுத்த ஒரு விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் பாலிவுட் நடிகை கஜோல் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also read : திருச்சிற்றம்பலம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வரிசையில் சேருமா.? ஆறே நாளில் வாயை பிளக்க வைத்த வசூல்

அவருக்கும் தனுசுக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பட குழு ஐஸ்வர்யா ராயிடம் தான் கேட்டிருக்கிறார்கள். கதையை கேட்ட அவர் இது போன்ற நெகட்டிவ் கேரக்டரில் என்னால் நடிக்க முடியாது, என் ரேஞ்சே வேற என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான் கஜோல் அந்த கேரக்டரில் நடித்தார். நெகட்டிவ் கேரக்டர் என்ற ஒரே காரணத்திற்காக தனுஷுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

Also read : மேக்கப் இல்லாமல் 2 நட்சத்திரங்கள்.. பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான புகைப்படம்

வரலாற்று நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதில் ஐஸ்வர்யா ராய் சோழ சாம்ராஜ்யத்தை பழி தீர்க்கும் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சொல்லப்போனால் அந்த கதாபாத்திரம் விஷமுள்ள நாகப்பாம்புக்கு இணையாக இருக்கும் கேரக்டர்.

அப்படிப்பட்ட கேரக்டரில் துணிந்து நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனுஷுக்கு மட்டும் ஏன் மறுப்பு தெரிவித்தார் என்பது தான் தற்போது பலரின் கேள்வியாக இருக்கிறது. மேலும் மணிரத்னம், ஐஸ்வர்யா ராய்க்கு குரு ஸ்தானத்தில் இருப்பதால்தான் அவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார் என்று கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஐஸ்வர்யா ராயின் வில்லத்தனத்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : யானைக்கும் அடி சறுக்கும்.. மணிரத்னம் பெயரை கெடுத்த 5 மோசமான படங்கள்

Trending News