சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இவ்ளோ லேட்டாவா விஷ் பண்ணுறது.. கேக் இல்ல.. பார்ட்டி இல்ல.. என்னதான் பண்ணுவார்கள்?

பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் அமிதாப் பச்சன் நேற்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், சினிமா ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக அமிதாப் பச்சனின் 80வது பிறந்தநாளில் ஜெயா மற்றும் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் குரோர்பதி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.அப்பொழுது தான் தங்கள் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதை தெரிவித்தார் ஜெயா.

இந்தியாவில் முக்கியமான நபர், அதுவும் சினிமா குடும்பம் என்று இருக்கும்போது, கண்டிப்பாக பார்ட்டி கலாச்சாரம் இருக்கும் என்று தான் நாம் எதிர்பார்த்திருப்போம். ஆனால் அது எதுவுமே கிடையாதாம்.

பொதுவாக பிறந்தநாள் என்றால் கேக் வெட்டுவார்கள்,ஹேப்பி பர்த்டே டூ யூ பாடல் பாடுவார்கள். ஆனால் அமிதாப் பச்சன் வீட்டில் அது இரண்டுமே கிடையாது. கேக் வெட்ட மாட்டார்கள் அதற்கு பதிலாக வேறொரு பொருள் சாப்பிடுவார்கள்.

என்ன தான் செய்வார்கள் பிறந்த நாளில்

பிறந்தநாள் அன்று பால்கோவா தான் சாப்பிடுவார்களாம். மேலும் ஹேப்பி பர்தேடே என பாட்டு பாடாமல் ஹர்ஷ் நவ், வர்ஷ் நவ், ஜீவன் உத்கர்ஷ் நவ் என்பார்களாம். ஹர்ஷ் நவ், வர்ஷ் நவ், ஜீவன் உத்கர்ஷ் நவ் என்றால் புது வருடம், புது மகிழ்ச்சி, புது நல்ல வாழ்க்கை என்று அர்த்தமாம்.

இந்த நிலையில், இந்த வருடமும் இதே போல பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், மாமனார் அமிதாப் பாச்சனுக்கு ஐஸ்வர்யா ராய் ரொம்ப லேட்டா விஷ் செய்திருக்கிறார்கள் என்று ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளார்கள் அன்பிற்குரிய நெட்டிசன்கள்.

எல்லோரும் முதல் ஆளாக அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், ஐஸ்வர்யா ராய் இரவு நேரம், பிறந்த நாள் முடியும்போது வாழ்த்து கூறியிருக்கிறார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. சமூக வலைதளத்தில் தான் லேட்டா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். நேரில் சென்று அவர் ஆசி கூட பெற்றிருப்பார்க்ள. சமூக வலைத்தளத்தை handle செய்பவர் கூட லேட்டா வாழ்த்து போட்டிருக்கலாம். இதை வைத்து ஒரு புரளியை கிளப்ப முயற்சி செய்கிறார்கள் சில நல்ல உள்ளம் கொண்ட நெட்டிசன்கள்.

Trending News